Friday, 28 December 2018

28.12.18

இன்று கல்லூரியில் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது .

Thursday, 27 December 2018

27.12.18

இன்று கல்லூரியில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது .

Wednesday, 26 December 2018

26.12.18

இன்று   கல்லூரியில் விளையாட்டு நிகழ்சி நடைபெற்றது

Saturday, 22 December 2018

22.12.18

இன்று அறிவின் வகைகள் , செயல்திறன்கள் , பயிற்ச்சி ,  ஆராந்து அறிதல் , தகவல்கள் , விவரக்குறிப்புகள் , நம்பிக்கை ,  ஜனனாயகம் /மக்கள் விளக்கம், தன்னாச்சி நிறுவனத்தின் தாக்கம் பற்றி சிறு தேர்வு எழுதினேன்

Friday, 21 December 2018

21.12.18

இன்று கல்வியில் சோதனை என்பதற்கான விளக்கம் , சோதனையின் வகைகள்  , அடைவுச் சோதனைகள் , குறையறி சோதனைகள், திறமைகான சோதனைகள் , வாய்மொழி சோதனைகள் , செய்முறைச் சோதனை பற்றி அறிந்தேன் . மக்களாட்சியும் கல்வியில் அதன் செல்வாக்கும் , தன்னாட்சியும் கல்வியும் பற்றி  படித்தேன் .

Thursday, 20 December 2018

20.12.18

இன்று கலைத்திட்ட உருவாக்கம் என்பது ஒரு செயல்முறை , கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் , கலைத்திட்ட வளர்ச்சியில் பங்கு பெறுவோர் , கலைத்திட்ட வளர்ச்சியில் பெற்றோர்களது பங்கு மற்றும் வகுப்பறை மதிப்பிடலுக்கான கருவிகளும் உத்திகளும , உற்று நோக்கல் பற்றி அறிந்து கொண்டேன் .

Wednesday, 19 December 2018

19.12.18

இன்று கலைத்திட்ட உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் , மாணவர் இயல்பு மற்றும் தேவைகள் , விழுமங்கள் , கற்றல் பொருள்களான பாடநூல்கள் , சிறுவர் இலககியம் , ஆசிரியருக்கு உதவும் கையேடு அகியவற்றை பற்றி அறிந்து கொண்டேன் .

Tuesday, 18 December 2018

18.12.18

இன்று அறிவின் வகைகள் , கல்வி குறித்து தாகூரின் சிறந்த கருத்துகள் , ஜான் டூயின் கல்வி தாக்கங்கள் , வாழ்க்கை குறிப்புகள் , கோட்பாடுகள் அடிப்படை தாக்கங்கள் அகியவற்றை படித்தேன் .

Monday, 17 December 2018

17.12.18

இன்று கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் பாடத்தில் சமூக நியதிகளை புத்தாக்கம் செய்தல் , அரசு அதிகாரமும் கலைத்திட்டமும் , அரசின் அடிப்படைக் கொள்கையும் கலைத்திட்டமும் பற்றி படித்தேன் .

Thursday, 13 December 2018

13.12.18

இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத் தேர்வும் , 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது .

Wednesday, 12 December 2018

12.12.18

இன்று 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலத்தேர்வும்  , 8  ஆம்  வகுப்புக்கு தமிழ் தேர்வும் , 9 ஆம் வகுப்புக்கு தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடைபெற்றது .

Tuesday, 11 December 2018

11.12.18

இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தமிழ் இரண்டாம் தாள் , ( 6 , 7 , 9 ) வகுப்புகளுக்கு இரண்டாம் பருவத் தேர்வு தமிழ் தேர்வு நடைபெற்றது .

Monday, 10 December 2018

10.12.18

இன்று பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தமிழ் முதல் தாள் நடைபெற்றது .

Wednesday, 31 October 2018

31.10.18

  இன்று எதிர்மின்வாய்க் கதிர்களின் பண்புகள் பற்றியும் , மந்த வாயுக்களின் அணு அமைப்பு , உலோகங்கள் , அலோகங்கள் மற்றும் உலோகப் போலிகள் பற்றி கற்பித்தேன் .

Tuesday, 30 October 2018

30.10.18

இன்று நவீன தனிம வரிசை அட்டவணையின் சிறப்புகள் , தனிமவரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் நிலைப்பாடு , காரஉலோகங்களுக்கான தனிம அட்டவணை பற்றி கற்பித்தேன் .

Monday, 29 October 2018

29.10.18

இன்று நவீன ஆவர்த்தன  விதி , நீள் வரிசை தனிம அட்டவணை அமைப்பின் சிறப்புகள் , தனிமங்களை தொகுதிகளாக நவீன தனிம அட்டவணையில் வரிசைப்படுத்துதல் பற்றி கற்பித்தேன் .

Wednesday, 24 October 2018

24.10.18

இன்று மெண்டெலீவின் தனிம வரிசை அட்டவணை மற்றும் மெண்டெலீவின் சிறப்புகள் , மெண்டெலீவின் தனிம வரிசைக்கான குறைபாடுகள் பற்றி கற்பித்தேன் .

Tuesday, 23 October 2018

23.10.18

இன்று மாறாவிகித விதி , டால்டனின் அணுக்  கொள்கை , டால்டனின் அணுக் கொள்கையின் நிறை , டால்டனின் அணுக் கொள்கையின் குறைகள் பற்றி கற்பித்தேன் .

Tuesday, 9 October 2018

9.10.18

இன்று மனித எலும்புக்கூடு இரு வகைப்படும் அவை அச்சுச் சட்டம் , இணையுறுப்புச்சட்டம் பாடம் கற்பித்தேன் . தன்வெப்ப ஏற்புத் திறன் , வெப்ப ஏற்புத் திறன் , நிலை மாற்றம் பற்றி கற்பித்தேன்

Saturday, 6 October 2018

6.10.18

இன்று அறிவுக்கும் செய்திறனுக்கும் இடையேயான வேறுபாடு , கற்பித்தலுக்கும் பயிற்சியளித்தலுக்கும் இடையேயான வேறுபாடு , அறிவுக்கும் , தகவலுக்கும் இடையேயான வேறுபாடு பற்றி படித்தேன் . உடற்பயிற்சியினால் சுவாச மண்டலத்தில் ஏற்படும் விளைவு பற்றி படித்தேன் .

Monday, 1 October 2018

1.10.18

இன்று செய்திறன்கள் , பயிற்சியளித்தல் , தகவல் விவரக்குறிப்பு , ஆராய்ந்தறிதல் , தொகுத்தறிதல் , பகுத்தறிதல் பற்றி படித்தேன் . உடற்பயிற்ச்சி செய்வதன் மூலம் சுவாச மண்டலத்தில் ஏற்படும் விளைவு வாயுமாற்றத்தில் திறமை , கரியமில வாயு வெளியேற்றம் , சுவாச மண்டல தசைகள் , குறைந்த பிராண வாயுவில் செயலாற்றல் பற்றி படித்தேன் .

Friday, 28 September 2018

28.9.18

இன்று கலைத்திட்டம் தயாரித்தலில் இடம் பெறும் படிநிலைகள் , டைலரின் படிமம் மற்றும் நிறை ~ குறைகள் , வீலரின் படிமம் , ஹில்டா தாபாவின் படிமம் , கலைத்திட்டத்தின் பண்புகள் மற்றும் கோட்பாடுகள்  , கலைத்திட்ட வகைகள் பற்றி அறிந்தேன் . உடற்பயிற்சியினால் உடல் உறுப்பு மண்டலங்களில் ஏற்படும் விளைவுகள் பற்றி அறிந்தேன் .

Thursday, 27 September 2018

27.9.18

இன்று  கலைத்திட்டம் என்பது மாணவர் கற்றலுக்கு வழி காட்டுதல் , குறிக்கோள்களை அடைவதற்கான வழிமுறை , மாணவர் பெற்றுள்ள கற்றல் அனுபவங்கள்  பற்றி  அறிந்தேன் , செயலாற்றும் நடைமுறைகள் அடிப்படையிலான செயலாற்றல் குறைபாடு குறித்த படிமம் , கருணை அடிப்படையிலான செயலாற்றல் குறைபாடு குறித்த படிமம்   பற்றி அறிந்தேன் , ஒப்பார் மற்றும் சுய மதிபபீடு பற்றி அறிந்தேன் .

Wednesday, 26 September 2018

26.9.18

இன்று பன்முகப் பண்பாட்டு சமூகமும் கல்வியும் , கலைத்திட்டம் என்பதன் சொல்பொருள் , கலைத்திட்டம் பற்றிய சில முக்கிய வரையறைகள் , கலைத்திட்டத்தின் கட்டமைப்பும் , செயல்பாடும் பற்றி அறிந்தேன் . மதிப்பிடலின் வகைகள் பயிற்சி அடிப்படையிலான மதிப்பீடு , சான்று அடிப்படையிலான மதிப்பீடூ , செயல்பாட்டுத்திறன் அடிப்படையிலான மதிப்பீடு , தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு  , மாணவர்களது கற்றலை மதிப்பிடுவதற்கான வகுப்பறை நடைமுறைகளில் ஆசிரியர்  , மாணவர் இடையேயான உரையாடல் , பின்னூட்டம் , ஒப்பார் மற்றும் சுய மதிப்பீடு பற்றி அறிந்தேன் .

Tuesday, 25 September 2018

25.9.18

இன்று மக்களாட்சி என்பதன் பொருள் , வரையறை , முக்கிய அம்சங்கள் , மக்களாட்சி பற்றிய ஜான் டூயியின் கருத்து , கல்வி பற்றிய தகவல் பற்றி அறிந்தேன் . உடற்கல்வி என்பதன் வரையறை மற்றும் பொருள் , உடற்கலாச்சாரம் , உடற்பயிற்சியின் இலக்கு , நோக்கம் , உடற்கல்வியின் வளர்ச்சி பற்றி அறிந்தேன் .

Thursday, 20 September 2018

Today 9.8

நாம் இன்று இயக்கம் பற்றி பார்க்க போகிறோம்.அதில் இடம் பெறும் செயல் பாடுகளை பற்றி காண்போம்.              
தொலைவு
     ஓரு நகரம் பொருள் கடந்த வந்த உண்மையான பாதையின் அளவு தொலைவு எனப்படும்.
இடப்பெயர்ச்சி
      ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும்
பொருள் ஒன்றின் நிலையில் ஏற்படும் மாற்றமே இடப்பெயர்ச்சி எனப்படும். 
இதன் செயல்பாடுகளை பார்த்தோம்

Monday, 3 September 2018

3.9 18

இன்று இயக்கவியலில்  முடுக்கம் , திசை வேகம் , பற்றி கற்பித்தேன் . நம்மைச் சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் பற்றிய பாடத்தில் கேள்வி அமைக்கப்பட்டு அது பற்றி நினைவுட்டல் நடைபெற்றது .

Friday, 31 August 2018

31.8.18

இன்று வேகம் என்றால் என்ன  ?  வேகம் = கடந்த தொலைவு /எடுத்து கொண்ட நேரம் , மகிழுந்தின் சராசரி வேகம் என்ன என்பது வேகம் = கடந்த மொத்த தொலைவு / எடுத்துகொண்ட  மொத்த  நேரம் பற்றி கற்பித்தேன் .

Tuesday, 28 August 2018

24.8.18

இன்று விசையின் செயல்பாடு மற்றும் விளைவு , பொருளின் இயக்க நிலை , நீர்மங்களிலும் வாயுக்களிலும் ஏற்படும் அழுத்தம் பற்றியும் , விலங்குகள் வாழும் உலகம் பற்றி அறிந்தேன் .

Tuesday, 21 August 2018

21.8.18

இன்று நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நீரியல் கருவிகளான மண் அகழ்வி , மகிழுந்தின் தடைகள் அடிப்படையிலேயே வேலை செய்கின்றன . மூடப்பட்ட நிலையில் ஒரு திரவத்தின் ஒரு பகுதியில் கொடுக்கப்படும் அழுத்தமானது , அதன் அனைத்துப் பகுதிகளிலும் சமமாகக் கடத்தப்படுகிறது .

Tuesday, 14 August 2018

14.8.18

இன்று  சேர்மத்தின் சிறப்பியல்புகள் , பயன்பாடு , சேர்மங்களின் வகைகள் கரிமச் சேர்மம் , கனிமச் சேர்மம் , சேர்மங்களின் வாயப்பாடு , இணைதிரன் அகியவைகள் பற்றி அறிந்தேன் .

Thursday, 9 August 2018

28.12.2017

இன்று உலகளாவிய பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. முதல் பிரிவில் கற்றலை மாணவர்களிடம் சென்றடையவேண்டும் என்பதை டாக்டர். பி.சீனிவாசன் அவர்கள் கற்பித்தார். அதில் ஆசிரியர் மாணவர்கள் இடையே வகுப்பறைகளில் கவனம், கருத்து உருவாக்கம் , செய்து காட்டல்,பிரச்சினைகளைத்தீர்த்தல் போன்றவை செயல்படுத்துதல் போன்றவை கற்றுகொடுத்தார்.
   அடுத்த பிரிவுவேளையில் கஃப் ஆஃப் டீ, கஃப் ஆஃப் டீச் என்ற தலைப்பில் டாக்டர்.கே.தியாகு சூர்யா அவர்கள் கற்று கொடுத்தார். அதில் குழந்தைகளுக்கு,குமரபருவத்தினர்,தானாக முடிவெடுத்தல்,ஒப்பார்குழுவுடன் இணைந்து  கற்றல்,புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து கற்றல் போன்றவைப்பற்றி புதுமையான முறையில் ஆசிரியர் கற்பித்தல் அறிந்து கொண்டோம்.

23.12.2017

கற்பித்தல்,இடம்பெறக்கூடிய பல்வேறு வகையிலான திறன்கள்,உட்கூறுகள். மீச்சிறு பாடத்திட்ட வரைவு தயார் செய்தல்,அறிவியல் முறை,செயல்திட்ட முறை,புதிர்களை தீர்க்கும் முறைகளின் படிநிலைகள்,ஆசிரியர் கற்பித்தல் முறையின் சிறப்பியல்புகள்,கற்பித்தல் முறைகளுள் கற்பவர் மைய கற்பித்தல் முறைகள் போன்றவை தேர்வு எழுதினோம்.

21.12.2017

இன்று கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் வகுப்பறையில் தகவல் தொடர்பு செயல்பாடு,வினாக்கேட்டலின் வகைகள்,வாய்மொழியின் முக்கியத்துவம்,படித்து பொருளுணர்தலும்,பாதிக்கும் காரணிகள்,இடைவினைத்தன்மை புரிந்து கொள்ளும் தன்மை போன்றவை தேர்வு எழுதினோம்.
   பாலினம்,பள்ளி மற்றும் சமுதாயத்தில் பள்ளி பாட நூல்களிலும், கலைத்திட்டங்களிலும் பாலின பங்கு பணிகள்,ஒருங்கிணைத்தல்,பலத்தரப்பட்ட பண்பாட்டு வரம்புகளுக்குள் காணப்படும் பாலினப்பிரச்சனைகள் போன்றவைப் தேர்வு எழுதினோம்.

22.12.2017

இன்று பாடங்கள் மற்றும் பாடப்பொருளைப் புரிந்துகொள்ளலில் பள்ளி கலைத்திட்டத்தில் ஒரு பாடத்தினை சேர்ப்பது அல்லது நீக்குவதற்கான காரணங்கள், சமூக மறுசீரப்பமைப்பிற்காக சமூக கலைத்திட்டம், பாடப்பிரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள்,கற்பவர் மைய கலைத்திட்டம், மாணவர் மையக்கலைத்திட்டத்தை தயார் செய்தல் போன்றவை தேர்வு எழுதினோம்.
   அடுத்த பிரிவுவேளைகளில் பொருளறிவியல் கற்பித்தலில் மாணவர் மைய கலைத்திட்டம்,ஆசிரியர் மைய கலைத்திட்டம் போன்றவை படித்து கொண்டிருந்தோம்.

20.12.2017

Leaning and teaching

  இன்று கற்றல் கற்பித்தல் தேர்வில் உள்ளொளிக்கற்றல்,அறிதிறன் வளர்ச்சி,மாஸ்லோவின் தேவை படிநிலைகள்,கற்போர் மைய கற்பித்தல் தேர்வு எழுதினோம்.
   அடுத்த பிரிவு வேளையில் பாலினமும்,பள்ளிக்கலைத்திட்டமும் படித்து கொண்டிருந்தோம்.

07.08.2018 Observation

நாம்இன்று magnetic effect of electrical பாா்த்தோம். அதில் மாணவர்கள் முன் வகுப்பில் நடந்ததை பற்றி கேட்டனாா்.அதில் drict current and alternative current பற்றி மாணவர்கள் கூறினார்.இப்போது magnetic பற்றி பார்ப்போம்.அதன் பயன்பாடு பற்றி மாணவர்களுக்கு விளக்கினாா்.

Monday, 6 August 2018

First day training

First day training so happy.மாணவர்களிடம் interactionசெய்தோம்.மாணவர்களை கவனித்துக் கொண்டேன்.அதன் பிறகு கரும்பலகையில் தமிழ் கட்டுரையை எழுதினேன்.இதன் மூலம் கரும்பலகையை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை அறிந்தேன்.அதன் பிறகு observation class கவனித்தேன்.இதன் மூலம் வகுப்பாசிரியர் மாணவர்களை எவ்வாறு பாடத்துடன் interaction செய்து கற்றுக்கொடுக்கிறார் என்பதையும் அறிந்துக்கொண்டேன்.

Saturday, 4 August 2018

25.07.18

Today
செயலாற்றல் குறைபாடு குறித்த படிவம் என்பது இயல்புநிலை உடையோர்,பிறிதொரு சாரார் பற்றி உருவாக்கி அளித்திடும் சொற்சித்திரம். செயலாற்றல் குறைபாட்டின் வகைகளான செயலாற்றல் குறைபாடுகுறித்த தனியாள் படிமம்- குறைபாட்டுப் பிரச்சினையின் தோன்றுவது தனிநபரிடத்தில் உள்ளது, குறைபாடு ஏற்படுவதற்கான காரணம், ஒருவரது ஆற்றல் குன்றிருத்தல் ஆகும். செயலாற்றல் குறைபாடு குறித்தசமூகப்படிமம் - ஊனமுற்றோர், இயல்பான சமுதாய வாழ்க்கையைப் பெற்றிடும் வாய்ப்புகள், மற்றவர்களை ஒப்பிடும்போது சம அளவில் இல்லாமலிருப்பது ஆகும்.

24.07.18

Today
     நவீனத்துவம் என்பது மரபுரீதியிலானவற்றை மறுத்தொழித்தல்என்பதாகும். மேலும் அதனுடைய இயல்புகளான தனிநபர் வளர்ச்சிக்கு முன்னுரிமையளித்தல்,    சுதந்தரமும் சமத்துவமும் பேணப்படுதல், மனிதத்தன்மை முழுமை பெற வேண்டும், பகுத்தறிவு வாதம் முன்னிலைப்படுத்தப்படுதல், வேளாண் பொருளாதாரத்தலிருந்து தொழில்சார்ந்த பொருளாதாரத்திற்கு மாற்றுதல், தொழிற்சாலைமயமாக்கல், நகர்மயமாக்கல், சமயச்சார்பின்மையாக்கல்,ஜனநாயக அரசமைப்பு மற்றும் அதனுள் இடம் பெறும் அமைப்புகள் நிறுவுதல் போன்றவற்றை பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம்.

23.07.18

பண்பாடு


  பண்பாடு என்பது  ஒரு தலைமுறை மக்கள் தங்களது அடுத்த தலைமுறையினருக்கு வழங்கக்கூடிய அனைத்துமே பண்பாட்டில் அடங்கும்.
பள்ளியும் பண்பாட்டு சூழலும்: பண்பாட்டிற்கு இசைவாக மாணவர்களை மாற்றுதல்.பள்ளியின் மூன்று கடமைகள் 1.பண்பாட்டைப் பாதுகாத்தல் 2.பண்பாட்டைப் பரப்புதல் 3.பண்பாட்டை மேம்படுத்துதல். பண்பாடும்கலைத்திட்டமும்: பண்பாட்டு கூறுகளை அலசி ஆராய்ந்து,விளையாட்டுவேலைஅனுபவம்,சமூக சேவை,படைப்பாற்றல்தூண்டும் செயல்,தனிநபர் திறன்உணர்த்தும் செயல்கள் ஆகிய கல்விக் கூறுகளின் மூலம் பண்பாட்டின் சிறப்பு அம்சங்களை மாணவர்கள் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்.


14.07.18

Knowledge and curriculum​

இன்று அறிவுக்கும் செய்திறனுக்கும் இடையேயான வேறுபாடு பார்த்தோம்.அதன் பிறகு physical science lessons plan பார்த்தோம்.

13.07.18

Knowledge
அறிவு என்பது கோட்பாடுகளின் தத்துவமாகும், படிப்பதன் மூலமே பெற முடியும், ஐம்புலன்களின் மூலமே பெறக்கூடிய தகவல், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும், சூழ்நிலையை சார்ந்தது, கற்றுக்கொள்ளக்கூடியது மற்றும் பல்வேறு பாடங்களிலிருந்து பெறக்கூடியது. 
    திறன் என்பது நடைமுறை பயன்பாடாகும், குறிப்பிட்ட சூழ்நிலையால் பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதாகும், நடைமுறை பயன்பாட்டிலிருந்து பெற முடியும், பயிற்சி பெறக்கூடியது, மற்றும் பிரச்சனைகளுக்கான காரணங்களுக்கு சரியான தீர்வை காண முடியும்  இவற்றிற்றிடையேயான வேறுப்பாட்டை கற்றுக்கொண்டோம்.

12.07.18

Yoga
ஆசனங்கள் மூன்று வகைகளாக உள்ளன. 1.அமர்ந்து செய்யும்ஆசனங்கள்,2.அமர்ந்து செய்யும்ஆசனங்கள்,3.படுத்துக்கொண்டு செய்யும் ஆசனங்கள். இன்று அமர்ந்து செய்யும் ஆசனங்கள் செய்தோம்.1.பத்மாஸானா2.மத்ஸ்யாஸனா 3.வஜ்ராஸனா4.பஷ்சிமோத்தானாசனா 5.வக்ராசனா6.யோகா முத்ராசனா.  இவ்வாசனங்கள் மேற்கொள்வதால் சீரான இரத்த ஓட்டம்,ஜிரண மண்டல உறுப்பு,தசைகளின் இறுக்கம்,முதுகுத்தண்டு தசையிலும்,கல்லீரல் வீக்கம் தைராய்டு சுரப்பி இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்யப்படுகின்றன. இதனை தொடர்ந்து சூரிய நமஸ்காரத்தின் 12 நிலைகளும் செய்தும் மற்றும் அவற்றினால் ஏற்படும் நன்மைகளும் அறிந்து கொண்டோம்.

11.07.18

Yoga

உள்ளடக்கிய பள்ளியை உருவாக்குதல்பாட வேளையில் குறைபாடுகளின் வகைகளான செவிதிறன் குறைபாடு, பேச்சுதிறன் குறைபாடு, பார்வைதிறன் குறைபாடு, உளவியல் சார்ந்த குறைபாடு என்பதை அறிந்து கொண்டோம்.அறிவு மற்றும் பாடத்திட்டம் பாட வேளையில் கற்பித்தல், பயிற்சி, தகவல் போன்றவைகளை தெரிந்து கொண்டோம்.யோகா,உடல்நலம் மற்றும் உடல்நலக்கல்வி பாட வேளையில் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அதில் 1.ஆசனம்,2.பிராணயாமம்,3.தியானம் மேற்கொள்ளவதால் ஏற்படும் நன்மைகள் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்.

10.07.18

Today

அறிவு மற்றும் பாடத்திட்டம் என்ற பாடவேளையில் அறிவாராய்ச்சி அடிப்படையிலான கல்வி என்பதை கற்றுக்கொண்டோம்.Philosophy என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது.Philos-love(true),Sophia-wisdom(knowledge). இதில் ஒன்று அறிவாராய்ச்சி ஆகும். உடல் சோர்வுக்கு  மற்றொரு பொருளை weary என்பதை அறிந்து கொண்டோம். சேலம் மாவட்டத்தில் ஐந்து கல்வி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டோம். யோகா சமஸ்கிருத மொழியான யுஜ் என்ற மொழியிலிருந்து உருவானது.யோகாவின் குருபதஞ்சலிமுனிவர். என்பதை அறிந்து கொண்டோம்.

09.07.18

புதிய ஆண்டு தொடக்கம்


  இன்று இரண்டாம் ஆண்டு முதல்நாள் தொடங்கப்பட்டது. முதல் பாட வேளையில் அறிவு மற்றும் கலைத்திட்டம்முன்னுரை மேலும் அதிலுள்ள அலகுகள் கலந்துரையாடப்பட்டது. பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் திறன்கள் கலந்துரையாடப்பட்டது. யோகா,உடல்நலம் மற்றும்உடல்நலக்கல்வி பாட வேளையில் யோகாவின் தோற்றம் மற்றும் தோன்றுவதற்க்கு முக்கிய காரணமானவர்கள்,எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது கலந்துரையாடப்பட்டது.உள்ளடக்கிய பள்ளியை உருவாக்குதல்,கற்றல் மதிப்பீடு பாட வேளைகளில் பாடத்தினை பற்றிய கருத்துகள் கலந்துரையாடப்பட்டது.


Tuesday, 31 July 2018

31.7.18

இன்று மாணவர்களது கற்றல் தொடர்பான செயல்பாடுகளின் தொகுப்பைக் கொண்டு கற்றல் மதிப்பிடு செய்வதை வடிவமைத்தல் அவற்றில் நோக்கம் , மதிப்பிடுவதன் அடிப்படைகள் , மதிப்பீடு சான்றுகளை சேகரித்தல்  பற்றியும் , மாணவரது கற்றல் செயல்பாடுகளின் தொகுப்பைப் பயன்படுத்தி கற்றலை மதிப்பிடுவதன் நன்மைகள் மற்றும்குறைகளை பற்றியும் , மதிப்பெண்களுக்கு மாற்றாக வரிசைப்படுத்தப் பட்ட தரப்பிரிவு குறியீடுகளை பயன்படுத்துதல் பற்றியும் , மதிப்பிடலின் வகைகள் பயிற்சி அடிப்படையிலான மதிப்பீடு , சான்று அடிப்படையிலான மதிப்பீடு , செயல்பாட்டுத்திறம் அடிப்படையிலான மதிப்பீடு , தேர்வு அடிப்படையிலான மதிப்பீடு பற்றி அறிந்தேன் .

Monday, 30 July 2018

30.7.18

இன்று தாகூரின் கல்விச் சிந்தனைகள் சுதந்திரம் , படைப்பாற்றல் மிக்க சுயவெளியீடு , இயற்கையுடனும் , மனிதனுடனும் நல்லுறவு , உலக சகோதரத்துவம் , சாந்திநிகேதனும் , விஸ்வபாரதியும் , கல்வியில் தேசிய உணர்வு , உலகளாவிய நோக்கு , சமயச்சார்பின்மை ஆகியவை பற்றி ஜே . கிருஷ்ணமூர்த்தியின் கருத்து பற்றி அறிந்தேன் . ஒப்படைப்புகள் ,ஒப்படைப்பினை கற்பத்தல் கருவயாக செயல்படுத்திடும் முறை  , ஒப்படைப்பு அளித்தலின் நன்மைகள் , ஒப்படைப்பின் வரம்புகள் மற்றும் குறைபாடுகள் பற்றி அறிந்தேன் .

Monday, 30 April 2018

today

இன்று கல்லூரியில் தேசிய பெரிடர் மிட்புக்குழு வினர் பெரிடர் பற்றி ,எ.கா மழை வெள்ளம் , தீ விபத்து , நிலநடுக்கம் , போன்ற இயற்கை டர்பாடுகள், செயற்கை டர்பாடுகள் அகியவற்றில் இருந்து எப்படி மற்றவர்களை கப்பது . பற்றியும் செயல்முறையின் மூலம் விளக்கி அவற்றில் எந்தொந்த நிகழ்வுகளில் எப்படி பட்ட யுத்திகளை கையால வேண்டும் என்பதையும் , விபத்துகளில் உயிருக்கு போறடும் மனிதர்களுக்கு எந்த வகையிலான முதலுதவி செய்யவேண்டும் என்பதை பற்றி நான் அறிந்தேன்.

Saturday, 28 April 2018

28.4.18

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் அறிவியல் ஆசிரியரின் சிறப்பியல்புகள் , அறிவியல் மையம் , அறிவியல் கண்காட்சி , ஆசிரியர்களின் பண்பியல்புகள் , அறிவியலின் வரம்புகள் பற்றி படித்தேன் .

Thursday, 12 April 2018

12.4.18

இன்று கற்றலும் கற்பித்தலும் பாடத்தில்  ஆசிரியர் செயற்பாடுகள் பண்புகள் வகுப்பறைக்கு வெளியே மாணவர்களின் கற்றல் முறை பற்றியும் , பாலின சார்பெண்ணங்கள் பங்கு பணிகள் பற்றி படித்தேன் .

Wednesday, 11 April 2018

11.4.18

இன்று இந்தியக் கல்விக்குழு , பண்டைய இந்தியக் கல்வி , கல்வி சிந்தனைகள் பற்றியும் , வகுப்பறையில் தகவல் தொடர்பு செயல்பாடு , பயிற்றுமொழி குறித்த ஆழ்ந்த கண்ணோட்டம் பற்றி படித்தேன் .

Tuesday, 10 April 2018

10.4.18

இன்று அறிவியல் ஆசிரியரின் பண்புகள் , மின்னியல் முறை கற்பித்தல் , தேர்வின் வகைகள் , அறிவு பற்றிய பல்வேறு கருத்துகள் , பள்ளிப்பாடங்களும் சமூகநீதியும் , சமூக அநீதியின் வெளிப்பாடு , பள்ளி பாடங்களில் சமூக நீதியை பேணுதல்  பற்றி படித்தேன் .

Monday, 9 April 2018

Today

இன்று மாணவர் மைய கற்பித்தல்முறை , செயல்திட்டப்பணிகள் பற்றியும் , வகுப்பறைக் கற்பித்தலில் தாய்மொழியின் பல்வேறு மொழிக் கொள்கை குறித்த கருத்துகள் பற்றி படித்தேன் .

Friday, 6 April 2018

Today

இன்று அறிவியல் ஆசிரியரின் பண்புகள் , வகுப்பறை செயற்பாடுகள் , அறிவியல் கண்காட்சி அமைப்பதற்குப் பயன்படும் சில கருத்துகள் , மாதிரி பாடத்திட்ட வடிவமைப்பு முறை , பாடத்திட்டம் வரையறை , கல்வி இணைச் செயல்பாடுகளை மதிப்பிடுதல் , தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறைகள் பற்றி படித்தேன் .

Thursday, 5 April 2018

04.04.2018

காலையில்(contemporary of India and society)படித்தல்.மதியம்(gender)படித்தல்

03.04.2018

காலையில்(childhood and growing up)படித்தல்.மதியம்(understand the displines and subject)படித்தல்

2.04.2018

காலை  முதல் பாடவளேையில் (physical science) படித்தோம்.அதன் பிறகு(childhood and growing up)படித்தாமே்.தற்கால இந்தியா பற்றி மாதிரி தேர்வுக்கு படித்தல்.மதிய பாடவேளயைில் கற்றலும் கற்பித்தலும்,பாலினம் பற்றி படித்தோம்

Wednesday, 28 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் மாதிரிப் பாடத் தேர்வு நடைப்பெற்றது. அதில் பொருளறிவியல் கற்பித்தலின் நன்மைகள், பொருளறிவியல், சொற்சாரா பாவனைகள்,அவற்றின் முக்கியத்துவம், இடைவினை வெள்ளைப் பலகை- பயன்கள், அறிவியல் ஆசிரியரின் பண்புகள், ஆசிரியர் மைய கற்பித்தல் முறைகளின் நன்மைகள் வினாக்கள் கேட்டப்பட்டு பதில் எழுதினோம். பாலினம், பள்ளி மற்றும் சமுதாயம் மாதிரி தேர்வு நடைப்பெற்றது, அதில் பாலினம்,பால் வேறுபாடு, பாலின அடையாளத்தின் அளவீடு,பாலின சமத்துவமின்மைக்கான காரணங்கள், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையிலிருந்து பாதுகாத்தல்,மக்கள் ஊடகத்தின் பாலின பங்கு போன்ற வினாக்கள் கேட்டகப்பட்டு பதில் எழுதினோம்.

Tuesday, 27 March 2018

today

இன்று கலைத்திட்டத்தை கடந்த மொழி   முதல் மாதிரித் தேர்வு நடைப்பெற்றது. வகுப்பறையில் வாய்மொழி மற்றும் எழுத்து வழியாக மொழியை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு,வகுப்பறைக் கற்பித்தலில்தாய்மொழியின் நிலைகள்,பல கலாச்சார வகுப்பறையில் மொழி கற்பித்தலுக்கான பள்ளி ஆசிரியருக்கான சவால்கள் போன்றவகையான வினாக்கள் கேட்கப்பட்டது. பாடப்பொருளையும் மற்றும் கிளைகளையும் புரிதல் மாதிரி பாடத்தேர்வில் பள்ளிப் பாடங்களை படிப்பதற்கான தேவை மற்றும் முக்கியத்துவம், பள்ளிப்பாடம் சமூக நீதிக்கும் இடையேயுள்ள தொடர்பு,பள்ளி கலைத்திட்டத்தில் பாடத்தை சேர்த்தல்,நீக்குவதற்கான காரணங்கள்,கற்பவர் மைய கலைத்திட்டத்தின் நன்மைகள், ப்ராட்ஃபீல்ட் கலைத்திட்டம்,வாழ்க்கை மைய கலைத்திட்டம் போன்ற வினாக்கள் கேட்கப்பட்டது.

Saturday, 24 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் மாதிரி பாடத் தேர்வு நடைப்பெற்றது.
   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் பல்வகைத் தன்மை கொண்ட வகுப்பறைகளில் கற்பித்தல் கலந்துரையாடப்பட்டது.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் மதிய உணவு திட்டம் எவ்வாறு உருவாக்கப்பட்டது எவ்வாறு செயல்படுகிறது என்பது கலந்துரையாடப்பட்டது.
   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் நகர்மயமாதல் மற்றும் அதனுடைய நன்மை தீமைகள் கலந்துரையாடப்பட்டது.
  கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் பாடப்பொருள் விளக்க பகுதிகளை புரிந்து கொள்ளுதலின் தன்மையையும்,உத்திகளையும் தேர்வு எழுதினோம்.

Thursday, 22 March 2018

today

குழந்தை பருவமும் அதில் ஏற்படும்வளர்ச்சிகளும் மாதிரி பாடத்தேர்வு நடைப்பெற்றது. அதில் குழந்தைகளின் வளர்ச்சிமுன்னேற்றத்தின் -கருத்துகள், வேறுபாடுகள், கோட்பாடுகள். மனித வளர்ச்சியின் முக்கிய நிலைகள்,பரிமாணங்கள்.ஜீன் பியாஜே யின் அறிதிறன் வளர்ச்சி படிநிலைக்கோட்பாடு, கல்வித்தாக்கங்கள்பிரான்ஃபென்பிரன்னரின் நால்வகை சூற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் இயல்புகள்.சமூக நெறிப்படுத்துதல் குழந்தையை நெறிப்படுத்துதலில் குடும்பம்பள்ளியின் பங்கு பணிகள். நகர்புற குடிசைவாழ் குழந்தைகள் அவர்களின் பிரச்சனை, தீர்ப்பதற்கான வழிமுறைகள். விளையாட்டு மற்றும் குழந்தைகளது விளையாட்டினை பாதிக்கும் காரணிகள் போன்றவை தேர்வு எழுதினோம்.
தற்கால இந்தியாவும் கல்வியும் மதிய உணவு திட்டத்தின் வரலாற்றுபின்னணி,செயல்படும் விதம்,2015 புதிய மதிய உணவு திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட விதிகள்,திட்டத்தின் குறிக்கோள்,கல்வியில் ஏற்படும் நன்மைகள்தமிழகத்தில் மதிய உணவு செயல்படும் விதம் போன்றவையும் படித்து கொண்டிருந்தோம்.

Modal Exam

இன்று (childhood and growing up)  modal exam நடந்தது.

Wednesday, 21 March 2018

today

தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தனிநபர் மற்றும் பிரிவினர்களது கல்வித் தேவைகள் நிறைவேற்றுவதன் அவசியம், அனைவருக்கும் தொடக்கக்கல்விஅளித்தல், என்பதன் கருத்து விளக்கம், நடைமுறைப்படுத்தலில் உள்ள இடர்பாடுகள், மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், சர்வசிக்ஷா அபியான் திட்டம், தேசிய இடைநிலைக்கல்வி திட்டம்,தேசிய உயர் கல்வித்திட்டம் ஆகியவற்றின் முக்கிய அம்சங்கள், ஒருங்கிணைந்த கல்வி,அனைவரையும் உள்ளடக்கியக் கல்வி  ஆகியவற்றின் பொருள் விளக்கம், அவற்றிற்கு இடையேயான வேறுபாடுடெலார் குழு அறிக்கையின் நான்கு தூண்களான அறிந்திடக் கற்றல், செய்திடக் கற்றல், ஒன்று கூடி வாழக்கற்றல்,தனித்தன்மையுடன் முழு ஆளுமையாக வளர்ச்சி பெறல் பற்றி விரிவாக தெரிந்து கொண்டிருந்தோம்

Today

முதல் பிரிவு வேலையில் தேர்வுக்கான வினாவை படித்தேன் இரண்டாம் பிரிவு வேலையில் அலகு நான்குக்கான தேர்வு ஏழுதினேன் மூன்றாம் பிரிவு வேலையில் தேர்வு ஏழுதினேன் நான்காம் பிரிவு வேலையில் தேர்வு ஏழுதினேன் ஐந்தாம் பிரிவு வேலையில் தேர்வுக்கான வினாவை படித்தேன். இன்றைய கற்றலில் நான் அனைத்து தேர்வுகளை நன்றாக ஏழுதினேன்

Exam Reading

காலையில்  (contemporary) படித்தோம் அதன் பிறகு மதியம் (childhood and growing up)படித்தல் முன் குமரப்பருவம் அல்லது முன் விடலைப் பருவம் (Preadolescence) என்பது மனித வளர்ச்சிப் பருவங்களில் ஒன்று ஆகும். இது ஆரம்ப குழந்தைப் பருவத்திற்கும் அடுத்ததும் விடலைப் பருவத்திற்கு முந்தியதும் ஆகும்.[1]

இப்பருவத்தின் தொடக்கமும் முடிவும் குறிப்பிட்டுக் கூற இயலாது. இப்பருவம் குழந்தைகளின் விடலைப் பருவமாக மாறும் ஒரு காலகட்டமாக அமைகிறது. இம்மாற்றம் உயிாியல் சமூகவியல் மற்றும் உளவியல் சாா்பான மாற்றங்களை கொண்டது.

முன்குமரப்பருவ நிகழ்வு

10 வயதிற்கு மேல் 14 வயதிற்குள்

உடல், மனம் இரண்டிலும் புதுப்புது மாற்றங்கள் தோன்றும்

கேள்விகள், குழப்பங்கள், சந்தேகங்கள் நிறைந்தது

வெட்கம், தயக்கம், கூச்சம் போன்றவை ஏற்படும்

புதிய புதிய உணா்வுகளும், சிந்தனைகளும் உருவாகும்

பாலூணா்வு சாா்ந்த எண்ணங்கள் உருவாகும்

சமூக, உள, மனவெழுச்சி மாற்றங்கள் தொடங்கும் பருவம்

ஆண், பெண் இருவாின் ஊட்டச்சத்து தேவைகளில் மாற்றம் ஏற்படும் பருவம்.

நெறிபிறழ் நடத்தை தோன்றும் காலம்.

Tuesday, 20 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில்  ஜான் டால்டன் என்பவர் அணுவானது எந்தவொரு பொருளிலும் மிக நுண்ணிய சிறிய துகள் அணு  என்றும், ஜெ.ஜெ.ஜாம்சன்  என்பவர் அணுவானது துகள்கள் நடுநிலைத்தன்மை உடையது என்றும், ரூதர்போர்டு  என்பவர் மையப்புள்ளி உட்கரு என்றும்,தங்கத்தகடு ஆல்பா துகள் சோதனை மூலம் நிரூப்பித்தார்.அதில் ஆல்பா துகள் ஹுலியம் ஆனது தங்கத்தகட்டில் ஊடுருவியும்,ஓரளவு விலகடைதல்,அதிகளவு விலகடைதல்,180°விலகடைகிறது.நீல்ஸ்போர்
என்பவர் நிலையான வட்டத்தில் வெற்றிடத்தில் எலக்ட்ரான் இருக்கிறது என்றும்,ஆற்றல் மட்டங்களை கூடு,ஆர்ப்பிட்டால் என்றும்,அதற்கு (K,L,M,N-1,2,3,4) பெயரிட்டப்பட்டது போன்றவற்றை தெரிந்து கொண்டோம். தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சமூக சமத்துவமின்மைக்கு காரணங்களான  இனப்பாகுப்பாடு,மதம்,பொருளாதாரம்,மொழி,வசிப்பிடம் போன்றவையாகும் என்பதையும் தெரிந்து கொண்டோம்

Monday, 19 March 2018

today

கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் நிலையான எதிர்காலத்திற்கான கற்பித்தலும் கற்றலும் சூற்றுச்சூழலின் மீது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தாக்கம்,சூற்றுச்சூழல் சீரழிவால் எதிர்கால மனித வாழ்வு இருண்ட நிலைக்கு தள்ளப்படுதல் ஆகும். நீடித்த நிலையான வளர்ச்சி.யுனெஸ்கோ வெளியிட்ட நிலையான எதிர்காலத்திற்கான கற்பித்தல்-கற்றல் திட்டம், நிலையான கற்பித்தல்-கற்றல் திட்டத்தின் குறிக்கோள்கள்.நிலையான எதிர்காலத்திற்கான கற்பித்தல்-கற்றல் திட்டத்தில் இடம் பெறும் கருத்தமைவுகள் கலைத்திட்டத்தின் அறிவார்ந்த அடிப்படைகள்,கலைத்திட்டத்தின் வழியே நீடித்திருக்கச் செய்தல் குறித்து கற்பித்தல்,பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு இடையேயான கலைத்திட்ட கருத்தமைவுகள்,கற்பித்தல் கற்றல் செயல்திட்டங்கள் போன்றவையாகும்

today

கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் கற்றல் செயல்பாட்டில் மாணவர்களது ஈடுபாட்டு நிலைகளான உண்மையான ஈடுபாடு, சடங்கு ரீதியான பணிவிணக்கம், செயல்முனைப்பற்ற பணிவிணக்கம், பின்னடைதல்,எதிர்ப்புணர்ச்சியைக்காட்டலாகும்.  மாணவர்களது கற்றல் ஈடுபாடு நிலையை வெளிப்படுத்தும் மூவகை வகுப்பறைகளான கற்றல் செயல்களில் ஆழ்ந்து ஈடுபாடு காணப்படும் வகுப்பறை,பணிவிணக்கம் கொண்ட வகுப்பறை,பணியிலிருந்து விலகிக் காணப்படும் வகுப்பறை போன்றவையாகும். மாணவர்கள் கற்றல் செயல்களில் ஈடுபடுதலை அதிகரிப்பதற்கான 10:2 முறையைப் பயன்படுத்திடல்,பாட போதனையில் மாணவர் இடநகர்விற்கு இடமளித்தல், சீரான வேகத்தில் வகுப்பறை போதனையை மேற்கொள்ளுதல்,திறன்மிகு பின்னூட்டம் பெற வகை செய்தல்,ஆசிரியர் பேசும் போது ஒரு வாக்கியத்தின் நடுவில் இடைநிறுத்தம் செய்து பின்பு தொடருதல் போன்றவை தேர்வு எழுதினோம்

Today

நாங்கள் தேர்வுக்கா படித்தோம்.கற்றலும் கற்பித்தல் தேர்வு எமுதினோம்.அதன் பிறகு பாடத்துறை தேர்வு எமுதினோம்

Sunday, 18 March 2018

today

இன்று முதல் பாட வேளையில் வளமூலங்களின் வகைகள் தேர்வு எழுதினோம்.
   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் கோல்ப் கற்கும் பாணிகள்,அறிவு கட்டமைப்பு உருவாக்குதல் தேர்வு எழுதினோம்.
   தற்கால இந்தியாவும் கல்வியும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
    குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளையாட்டும்,குழந்தையின் வளர்ச்சியும் கலந்துரையாடப்பட்டது.
   பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளல் பாட வேளையில் வாழ்க்கைசார் கலைத்திட்டத்தில் மாணவர்களின் கலந்துரையாடல் நடைப்பெற்றது.
   பாலினம்,பள்ளி மற்றும் சமுகம் பாட வேளையில் பெண்கள் மீதான வன்முறையும் மகளிர் பாதுகாப்பும் படித்து கொண்டிருந்தோம்.

Thursday, 15 March 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் கற்பித்தலுக்கான வளமூலங்கள், தேவை,முக்கியத்துவம் கலந்துரையாடப்பட்டது.

   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் பள்ளிக்கு உள்ளே மற்றும் வெளியே கற்றலின்  நன்மைகள் படித்து கொண்டிருந்தோம்.

   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் எஸ்.எஸ்.ஏ,ஆர்.எம்.எஸ்.ஏ,ஆர்.யு.எஸ்.ஏ படித்து கொண்டிருந்தோம்.

   குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் குழந்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் வரையறை,இயல்புகள், வேறுபாடுகள் கலந்துரையாடப்பட்டது.

   பாடங்களையும் பாடத்துறைகளையும் புரிந்து கொள்ளல் பாட வேளையில் பாட இயல் அறிவு  மற்றும் கலைத்திட்டம் குறித்த ஜான் டூயின் கருத்துகள் கலந்துரையாடப்பட்டது.

Wednesday, 14 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் மாதிரி தேர்வு வினாத்தாலுக்கான விடைகள் கலந்துரையாடப்பட்டது.

  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் கற்றலுக்கான வரையறை,கோட்பாடுகள் படித்துகொண்டிருந்தோம்.

  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சமூக பல்வகையின் வகைகள்,காரணிகள் படித்து கொண்டிருந்தோம்.

  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் ஊடக வன்முறையினால் குமரப்பருவம்,குழந்தைப்பருவத்தில் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் சூற்றுச்சூழல் மாசுப்பாட்டால் குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள் கலந்துரையாடப்பட்டது.

கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் மொழியின் பயன்கள் காலந்துரையாடப்பட்டது.

Tuesday, 13 March 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் சமுதாய வளமூலங்களான அறிவியல் கண்காட்சி, களப்பயணம் படித்து கொண்டிருந்தோம்.
  
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் மூண்றாவது அலகுதேர்வு நடைப்பெற்றத்தக்கான விடைத்தாள் கொடுக்கப்பட்டது.

  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் சமுக பல்வகைமையின் பொருள், வரையறை, வகைகள் படித்து கொண்டிருந்தோம்.
 
  குழந்தைப்பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாட வேளையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் குழந்தை வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் படித்து கொண்டிருந்தோம்.

பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் பாடப்பிரிவு,பாடங்கள் ஆகியவற்றின் பொருள், வரையறை,கருத்துகள் மற்றும் வேறுபாடு படித்து கொண்டிருந்தோம்

today

அனைத்து மாணவர்களிடம் எதிர்பார்க்கப்படும் உயர்நடத்தை மற்றும் கல்வித்தேர்ச்சி குறித்து தெளிவுபட.தெரிவித்தல்: வகுப்பறைச் செயல்களில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க சம வாய்ப்பளித்தல்.

  மாணவர்களை ஆக்கபூர்வமான வழியில் திருத்துதல்: மாணவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்,மாற்றுவழி செயல்களை சிந்தித்தல்.

   மாணவர்களை தமது வகுப்பறை நேர்மறையான நடத்தையில் பெருமிதம் கொள்ளுதல்: மாணவர்களது நடத்தையில் திருப்தியுறும்போதேல்லாம் பாராட்டி பின்னாட்டம் அளித்தல்.
   மாணவர்களிடம் ஆசிரியர் தமக்குள்ள அக்கறையை வெளிப்படுத்துதல்:மாணவர்களது குடும்ப பின்னணியை அறிதல்,மாணவர்கள் உணர்வுகளை புரிந்து கொண்டு, பரிவுடன் செயல்படல்.

   மாணவர்களிடம் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஆசிரியர் உதவிடல்: மாணவர்கள் விளையாட்டில் பங்கு பெறத்தூண்டுதல்,நகைச்சுவைப் புத்தங்களை படிக்கச் செய்தல்,நல்ல இசையைக் கேட்டல்.
கற்றல் கற்பித்தல் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Tuesday, 27 February 2018

today

இன்று மீச்சிறு கற்பித்தலில் வெப்பம் வாயுவிதி  பற்றி பாடத்திட்டம் வரைந்தேன் . தேசிய மதிய உணவு செயல்படும் விதம் பற்றி படித்தேன் . ஆசிரியர் பணி குறித்த மாணவ , ஆசிரியர்களின் மனப்பான்மை  பற்றி படித்தேன் . குழந்தையின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் விளையாட்டின் பங்கு பற்றி படித்தேன் .

Tuesday, 20 February 2018

today

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றமாகும்.

காரணிகள்;
தனியார் மயமாக்கம்- வளமை.
தாரளமயமாக்கம்-எழுச்சி.
நுகர்வோர்மையம்-வரவேற்பு.
குறைந்த செலவில் பொருட்களின் உற்பத்தி. தகவல்தொடர்பில் அபரிமிதமான வளர்ச்சி.

விரும்பத்தகு தாக்கங்கள்;
உயர்தொழில்நுட்பங்களின் வரவு.
பன்னாட்டு வணிகப் பெருக்கம்.
வேலைவாய்ப்பு பெருக்கம்.
அன்னிய முதலீடு தாராளமாகக்கிடைத்தல்.

எதிர்மறைத்தாக்கங்கள்;
நாடுகளுக்கு இடையே சமமற்ற தன்மை.
நிலையற்ற நிதிநிலை.
பணியாளர்களின் மீதான தாக்கம்.
விவசாயிகளின் மீதான தாக்கம்.
சுற்றுச்சூழல் சீர்கேடு.
பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம்.
  போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் மீச்சிறு கற்பித்தலுக்கு பாடவரைவு எழுதினேன் . குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பற்றி படித்தேன் .தேசிய கலைத்திட்ட கட்டமைப்பின் நோக்கு , கற்றலும் அறிவும் பற்றி படித்தேன் . விளைபயன்மிக்க கற்பித்தல் என்பதன் வரையறை , இயல்புகள் பற்றி தேர்வு எழுதினேன் . எழுதுதல் செயல்பாட்டில் இடம் பெறும் படிநிலைகள் பற்றி படித்தேன் .

Monday, 19 February 2018

today

பெண்தன்மையுடனோ அல்லது ஆண்தன்மையுடனோ எவரும் பிறப்பதில்லை;அத்தகைய தன்மையுடையவராக ஆக்கப்படுகிறார் என சைமன் டி ப்யூவோர்  பாலின தன் அடையாளம் பற்றி கூறுகிறார்.குமரப்பருவத்தில் உருவாகும் பாலினத்தன்டையாளம் முதிர் வாலிப வயத்திற்கும் இடைப்பட்ட பருவமாகும். இதில் மூன்று மாற்றங்களை குறிப்பிடுகின்றனர்.

  தற்கருத்து
ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டுள்ள மனபிம்பம், மனப்பான்மைகள்,உணர்ச்சிகளின் தொகுப்பே ஒட்டுமொத்த தற்கருத்தாகும்.

அதிரடியான உடல் வளர்ச்சி
  குமரப்பருவத்தில் ஆண்களும்,பெண்களும் உடல்வளர்ச்சியின் உச்சத்தை அடைகிறார்கள்.உயரம்,எடை இவை அதிகரிப்பதோடு,கை,கால்கள் நீளமாகவும் காணப்படும்.

எதிர்பாலினக்கவர்ச்சி
   குமரப்பருவத்தில் பாலுட்டிசுரப்பிகள் இயங்கத் தொடங்குவதால் பாலுணர்வு அதிகரித்து காணப்படும். இதில் மனக்கிளர்ச்சி,கவனச்சீர்குலைவும் மாணவர்களை அலைக்களிக்கும்.
போன்றவை குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Today

இன்று எரிக்சனின் குழந்தை வளர்ச்சி நிலை  , பாலின தப்பெண்ணங்கள் , இந்தியாவில் பாலின தப்பெண்ணங்கள் உருவாகுவதன் காரணம் பற்றி தேர்வு எழுதினேன் . இந்தியக் கல்வியில் தற்போது தாராளமயமாக்குதலின் தற்போதைய நிலை பற்றி படித்தேன் . கற்பித்தலும் அதன் தன்மையும் இயல்புகளும் பற்றி படித்தேன் . தேசிய முன்னேற்றத்திற்கு உதவும் வகையிலான அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் பற்றி தேர்வு எழுதினேன் .

Saturday, 17 February 2018

today

வகுப்பறை கற்பித்தலின்போது அதிக தடவை மாணவர்கள் தமது நேரத்தை கற்றல் செயல்களில் ஈடுபட பயன்படுத்தினால்,அதிகளவு கற்கிறார்கள்.

   கற்றல் செயல்களில் மாணவர்களது ஈடுபாட்டு நிலைகளான மாணவர்களின் உண்மையான ஈடுபாடு, சடங்கு ரீதியான பணிவிணக்கம்,செயல்முனைப்பற்ற பணிவிணக்கம் கொள்ளுதல்,பின்னடைதல்,எதிர்ப்புணர்ச்சிக்காட்டுதல் போன்றவையாகும்.

   மாணவர்களது கற்றல் ஈடுபாடு நிலையை வெளிப்படுத்தும் மூவகை வகுப்பறை நிகழ்வுகளான கற்றல்செயல்களில் ஆழ்ந்து ஈடுபாடு காணப்படும் வகுப்பறை,பணிவிணக்கம் கொண்ட வகுப்பறை,பணிலிருந்து விலகிக் காணப்படும் வகுப்பறை முறைகள் காணப்படுகிறது என்பது பற்றி கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Friday, 16 February 2018

today

நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் இணைத்து,ஒட்டி உறவாடிட இணைப்பு மொழி இல்லாது,பிரிவினை சக்திகள் தலைதூக்கிட முக்கியமான காரணிங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
   இந்தி மொழியை தேசிய மொழியாகவும், இணைப்பு மொழியாகவும் சுதந்திர இந்தியாவில் அங்கீகரிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.இந்தி மொழி இந்தியாவின் அரசு அலுவலக மொழியாக வளங்குவது உறுதி செய்யப்பட்டது.
  அரசியல் சாசனப்பிரிவுகளின்படி 1965ம் ஆண்டு ஜனவரி திங்கள் 26-ம் நாள், இந்திமொழி இந்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது.தென்னிந்தியாவில் பலத்த எதிர்ப்பு கிளம்பி கிளர்ச்சிகள் தொடர்ந்தன.இந்தியோடு ஆங்கிலமும்,அரசு அலுவல் மொழியாக விளங்கும் என்று இந்தியப்பார்லிமெண்டில் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.
  எல்லோரையும் மனமுவந்து ஏற்க வைப்பதே சாலச்சிறந்தது.நாட்டில் பல மொழிகள் புழங்குவது தீதல்ல.ஆனால் ஒவ்வொரு பகுதி மக்களும் தத்தம் தாய்மொழியே எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று வெறிகொள்ளல்,தவறான போதனைகள் நாட்டைப்பிளந்திடும் சக்திகளாகும்.
தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Today

இன்று வெப்பம் வாயுவிதி , ஔியியல் பற்றி அறிந்தேன் . சமுகவியல்பாக்கல் , அவற்றின் வகைகள் பற்றி படித்தேன் . கல்வி ஆதாரங்கள் அவற்றின் கொள்கைகள் பற்றி படித்தேன் . மாணவர்கள் கற்றல் செயல்களில் ஈடுபடுதல் மேம்படுத்திடும் வழிமுறை பற்றி தேர்வு எழுதினேன் . பல்பாடத்துறை நோக்கில் அமைந்த கலைத்திட்டம் , வாழ்க்கைசார் கலைத்திட்டத்தின் களங்கள் பற்றி படித்தேன் . பாலின தன் அடையாள பங்கு பற்றி படித்தேன் .

Thursday, 15 February 2018

today

பொருத்தமான கற்பித்தல்-கற்றல் சூழலை உருவாக்குதல்,கற்பித்தல் - கற்றல் செயலைத்திட்டமிட்ட படி நடைபெறச்செய்தல்.வகுப்பறை மேலாண்மையின் உட்கூறுகளும் காணப்படுகிறது.
திட்டமிடல்;
   வகுப்பறை அமைப்பை ஆராய்தல்,மாணவர்களின் தயார் நிலையை உறுதிசெய்தல்,நுழைவு நடத்தையை சோதித்தறிதல்,தேவைகளை அடையாளங்காணுதல்,குறிக்கோளை நிறுவுதல்,குறையறி சோதனையை உருவாக்கிக்கொள்ளுதல் போன்ற செயல்முறையாகும்.
கட்டமைத்தல்;
   குறிப்பிட்ட பாடத்தை சாதனங்களை சேகரித்து,முறைப்படி அமைத்தல்,வரிசைக்கிரமமாக அமைத்து கொள்ளுதல்.
முன்னின்று செயற்படுத்துதல்;
   கற்பிக்கும் சொற்பொழிவு முறை, செய்து காட்டல் முறை, செயல்திட்டத்தை மேற்கொள்ள உதவுதல்,ஒளிப்பேழை/
ஒலிநாடாக்களின் செளல்களாகும்.
கட்டுப்படுத்துதல்;
   வகுப்பறையில் கற்பித்தல்-கற்றல் செயல் செம்மையாக நடைபெற மாணக்கரின் கவனமின்மையைப் போக்குதல்,கண்டிப்புடன் நடந்து கொள்ளுதல்,மெல்லக்கற்போர் வேறொரு பயிற்று மொழியில் பயில்வோர் வகுப்பறை செயல்களை மாணக்கரின் நடத்தையை கட்டுப்படுத்த முடியும்.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் இயக்கம் ஔியியல் பற்றி கற்றறிந்தேன் . எரிக்சனின் உள சமுகவளர்ச்சி பியாஜேவின் அறிதிறன் வளர்ச்சி வைக்காட்ஸ்கியின் அறிதிறன் வளர்ச்சி கொள்கை பற்றி கற்றறிந்தேன் . நவின மயமாதல் , நன்மைகள் தாக்கங்கள் , அனைவருக்கும் கல்வி மத்திய மாநில கல்வி தேசிய கல்வி முறை பற்றி தேர்வு எழுதினேன் . ஆசிரியர் மாணவர் இடைவினை , வகுப்பறை செயல்களில் மாணவர்களின் செயல்பாடுகள் , கற்றல் முறை பற்றி படித்தேன் .

Wednesday, 14 February 2018

today

சட்டபிரிவு-343: இந்தியாவின் அரசு அலுவலக மொழி
  
   உட்பிரிவு(1) - தேவநாகரி எழுத்து வடிவம் கொண்ட ஹிந்தி மொழியே இந்தியாவின் அரசு அலுவலக மொழியாக இருக்கும்.
   உட்பிரிவு(2) - ஜனாதிபதி விரும்பினால் ஆங்கிலம் பயன்படுத்தப்படும் இடங்களில் ஆங்கிலத்தோடு,இந்தியையும் பயன்படுத்திட உத்தரவு பிறப்பித்திடலாம்.
  உட்பிரிவு(3) - ஆங்கிலத்தை தொடர்ந்து பயன்படுத்துதல்.தேவநாகரி வடிவிலான எண்களைக் குறிப்பிட்ட விஷயங்களுக்கு பயன்படுத்திடல்.
 
சட்டபிரிவு-345:மாநிலங்களின் அலுவலக மொழி

   சட்டபிரிவு 346,347 க்கு ஏற்ப,மாநில சட்டமன்றம்,ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை தனது மாநில மொழியாக தேர்வு செய்து சட்டம் அறிவித்திடலாம்.

சட்டபிரிவு-347: ஒரு மாநிலத்தில் குறிப்பிட்ட மொழியைப் பேசுவோர் அதனை அரசு அலுவலக மொழியாக அறிவிக்கக் கோருதல்

   கணிசமானோர் தாம் மொழியை மாநில அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக சேர்த்திட கோரினால்,ஜனாதிபதி ஏற்று,உரிய உத்தரவு பிறப்பிக்கலாம்.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Tuesday, 13 February 2018

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் பாடங்கள் அது அப்பாடம் சார்ந்த வினாக்கள் அவற்றின் மதிப்பிடு , வினா தேர்வுசெய்து அவற்றில் அறிந்துகொள்ளுதல் , பரிந்துகொள்ளுதல் ,  திறனின்வெளிப்பாடு பயன்கள் அகியவற்றை அறிந்தேன் . குழந்தை வளர்ச்சிபற்றிய ஐந்து வகையான கொள்கைகளை படித்தேன் . தற்கால இந்தியாவில் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களுக்கு மாதிரி வினா கற்பிக்கப்பட்டது . வகுப்பறை மேலாண்மைச் செயல்களும் அவற்றின் உட்கூறுகளும் பற்றி தேர்வு எழுதினேன்

Monday, 12 February 2018

today

பொருள்;

    இந்திய அரசின் கல்விக் கொள்கையை வகுக்கும் "மத்திய கல்வி ஆலோசனை வாரியம்",இடைநிலைக்குழுவின் பரிந்துரைகள் மறுத்து,1956-மும்மொழித்திட்டத்தை உருவாக்கியது.

பிரச்சினைகள்;
  
    பள்ளிக்கல்வித்திட்டம்,மாணவர்களுக்கு பெரும் சுமையாக மாறிப்போனது,இந்தி மொழி கற்க ஆர்வமின்மை, தமிழ்நாட்டில் இந்தி பயில்வதற்கு கடும் எதிர்ப்பு,6-10 வகுப்பு வரை,5 ஆண்டுகளுக்கு இரண்டாவது,மூன்றாவது மொழியைக் கற்பிக்க ஆகும் செலவும்,முயற்சியும் மிகவும் அதிகம்.

கோத்தாரி கல்வி குழுவின் பரிந்துரைகள்(1964-1966);

மும்மொழித்திட்டத்தை ஒப்புக்கொள்ளவில்லை,திருத்தம் செய்து "திருத்தியமைக்கப்பட்ட மும்மொழிக் கொள்கை" வெளியிட்டது.
  1)தாய்மொழி/வட்டார மொழி
  2)அரசு அலுவலக மொழி ஆங்கிலம்
  3)நவீன இந்திய அல்லது ஐரொப்பிய மொழி ஒன்று

Today

இன்று சி ஆர் ஐ  ~ கணினி பயன்படுத்துவதன் மூலம் பார்வை குறைபாடு எற்படுகிறது என்பது பற்றிய தகவல்கள் அறிந்தேன் .  தேசிய கலைத்திட்டம் பற்றி படித்தேன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை , ஆசிரியர் மாணவர் இடையே நல்லுறவு பேண வேண்டியதன் அவசியம் , ஆசிரியர் மாணவர் நல்லுறவை மேம்படுத்திடும் ஆலோசனைகள் பற்றி தேர்வு எழுதினேன் .பெண்கள் மீதான வன்முறையும் மகளிர் பாதுகாப்பும் பற்றி படித்தேன் .

Saturday, 10 February 2018

today

களப்பயணம் மற்றும் கள ஆய்வு மூலம் கற்றல்;

    மாணவர்கள், சூழ்நிலையோடு நெருக்கமான தொடர்பைப்பெற உதவுகிறது, கற்போரிடையே துடிப்பான கற்றலை ஊக்குவிக்கிறது,கூர்ந்து நோக்கும் திறனையும் ஆய்வுத்திறனையும் வளர்த்திடுகிறது,மாணவர்களிடம் சமூகத்திறன்களை மேம்படுத்துகிறது,மாணவர்களிடம் பிரச்சினையைத் தீர்க்கும் திறனை வளர்க்கிறது.

வலைப்பின்னல் தளங்களைப்பயன்படுத்தி கற்றல்;

   பொருள் படைக்கும் ஆற்றல்,உரைநடைப்பகுதிகளை ஆராய்ந்தறிந்து பொருளுரைத்தல் திறன்களை வளரச்செய்கிறது,கற்போரை மையமாகக் கொண்டு அமைகிறது,துடிப்பான கற்றலை ஊக்குவிக்கிறது, குழு உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பையும்,புரிந்துணர்தலையும் வளர்க்கின்றது.

பள்ளிக்கு வெளியே கற்றலின் வரம்புகள்;

  பள்ளி பாடவேளை அட்டவணையை அமைத்திடல் மிகவும் கடினம்,செலவு மிக்கது,மாணவர்களின் பாதுகாப்பின்மை,களப்பயணத்தை திட்டமிடுதலும்,நடத்திடலும் சவாலான பணியாகும்.

Friday, 9 February 2018

today

பொது மக்களது நிதி உதவி;
 
   தனி மனிதர்களும்,அறக்கட்டளைகளும், வணிக நிறுவனங்களும் கல்வி நிலையங்களை ஏற்படுத்தி நடத்தி வருகின்றன.கல்வி நிலையங்களகன் வளர்ச்சிக்காக நிலமாகவோ,பொருளாகவோ,பணமாகவோ,கட்டிடங்களாகவோ உதவி செய்து வருகின்றனர்.

கல்விக்கட்டணம்;

  பத்தாவது வகுப்பு வரை அரசு மற்றும் அரசுநிதி உதவி பெறும் பள்ளிகளில் கல்விக்கட்டணம் கிடையாது. உயர்கல்வியில் அரசு கல்வி நிலையங்களில் கட்டணங்கள் குறைவாக உள்ளன.எதாவது ஒரு வகை கட்டணச்சலுகை பெறுகின்றனர்.

மாணவர்களுக்கான கல்விக்கடன்;

  அரசுடையாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் நீண்ட கால படிப்புதவிக்கடன் வழங்குகிறது.45%அளவு தமிழக மாணவர்களே படிப்புதவித்தொகை பெறுகின்றனர்.

வெளிநாட்டு நிதி உதவி;

  வெளிநாடுகளிலிருந்து இந்தியா பெற்ற நிதி உதவி:
  ஆண்டு 2013:421 மில்லியன் டாலர்கள்
  ஆண்டு 2014:806 மில்லியன் டாலர்கள்

போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதப்பட்டது.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் ஒய்வு இயக்கம் தொலைவு இடப்பெர்ச்சி வேகம் திசைவேகம் ஒலியியல் பற்றி மீச்சிறு கற்பித்தல் நடைபெற்றது . சமூகப் பல்வகைமையின் நிலைகள் , உலகளாவிய இடைநிலைக்கல்வி பற்றி தேர்வு எழுதினோன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை , ஆசிரியர் மாணவர் இடையே நல்லுறவு பற்றி படித்தேன் . விரிகள கலைத்திட்டம் , விரிகள கலைத்திட்டத்தின் பயன்கள் , குறைகள் பற்றி தேர்வு எழுதினேன் .

Thursday, 8 February 2018

today

களப்பயணம் என்பது வகுப்பறைக்குள் கொண்டு வரமுடியாத பொருட்கள்,கருத்துகளோடு மாணவர் முழுமையான புலன் அனுபவம் பெற வேண்டுமென்பதற்காக வடிவமைக்கப்பட்ட பயிற்சி ஆகும்.

1)களப்பயிற்சிக்கு முந்தைய கட்டம்:

  ஆசிரியர் பாடப்புத்தகத்தை ஊன்றி படிக்கச் செய்கிறார்.ஒளிப்பேழை/நழுவல்களை இயக்கி,கண்ணுறச் செய்கிறார்.

2)களப்பயிற்சி கட்டம்:

   ஆசிரியர் மாணவர்களோடு குறிப்பிட்ட இடத்தைச் சென்றடைந்து தகவல்கள்/காட்சிகள் சேகரித்து குறிப்புகள் வழங்கிகிறார்.

3)களப்பயிற்சிக்கு பிந்தைய கட்டம்:

   வகுப்பறைக்கு திரும்பியபின்,சேகரித்த தகவல்களை விவாதித்து உற்றுநோக்கல்,ஒப்படைப்புகள்,கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள் போன்ற வடிவங்களில் ஆசிரியரிடம் மாணவர்கள் சமர்ப்பிப்பர்.
 
   இவ்வணுகுமுறை,முறையாக செயல்பட்டால்,மாணவர்கள் தாம் உற்றுநோக்கிய காட்சிகள் பதிவு செய்து,ஏற்கனவே பெற்ற தகவல்களின் அடிப்படையில் அளிப்பர்.மாணவர்கள் நேரிடை அனுபவங்கள் பெற உதவிடுகிறது.

Wednesday, 7 February 2018

today

பத்தாவது ஐந்தாண்டு திட்டம்
 
  வறுமை விகித்தை 2007 க்குள் 5% ஆக குறைத்தல்,புதிதாக வேலைக்குச் சேருவோர் வேலை வாய்ப்புக்கான திறனைப்பெற்றிருத்தல் மற்றும் திட்ட முதலிடு:921,291கோடி ரூபாய் கொண்டு திட்டமிடப்பட்டது.

       பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டம்

   பாலின சமத்துவமின்மையைக் கறைத்தல்,சுத்தமான குடிநீர் 2009 க்குள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்,கருத்தரிப்பு விகித்தை 2.1 எனக் குறைத்தல்.
 
      பன்னிரெண்டாவது ஐந்தாண்டு திட்டம்
 
   இத்திட்டம் இரண்டு ஆண்டுகள் மட்டும் நீடித்தது.ஆதார் அடையாள அட்டையை எல்லா குடிமக்களுக்கும் வழங்கல்,கருப்பு பணத்தை வெளிக்கொணர்தல்,மின்னணு பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துதல்.
 
  போன்றவை தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் தேர்வு எழுதினோம்.

Tuesday, 6 February 2018

study

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் குறுநிலை கற்பித்தல் கலந்துரையாடப்பட்டது.

   கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் பள்ளிக்கு வெளியே கற்றலின் நன்மைகள் தேர்வு எழுதினோம்.

  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட எட்டாம் ஐந்தாண்டு திட்டம் தேர்வு எழுதினோம்.

   பாலினம், பள்ளி சமுதாயம் பாட வேளையில் மொழிப்பயன்பாட்டில் பாலின  சமவத்துவம் கலந்துரையாடப்பட்டது.

  பாடங்களை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் விரிகள பாடத்திட்டம் பற்றி அறிந்து கொண்டோம்.

Monday, 5 February 2018

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் மாதிரி பாடத்திட்டம், குறுநிலை கற்பித்தல் கலந்துரையாடப்பட்டது.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான அணுகுமுறைகள் தேர்வு எழுதப்பட்டது.
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் ஐந்தாவது,ஆறாவது,ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தின் கல்வியின் நிதி ஒதுக்கீடு தேர்வு எழுதப்பட்டது.
  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் திட்டவிடும் பாம்பு.இது கண்ணில் பார்த்தாலே விஷம், கண்ணில் விஷத்தை கொட்டி விடும் தன்மை கொண்டது என்பதை புதிதாக கற்று கொண்டோம்.
  கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் குறிப்பெடுத்தலின் உத்திகள் படித்து கொண்டுருந்தோம்.

Saturday, 3 February 2018

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் குழு கற்பித்தல்,அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தேர்வு எழுதினோம்.
  கற்றலும் கற்பித்தலும் பாட வேளையில் உற்றுநோக்கி கற்றல்,பள்ளிக்கு வெளியே கற்றலின் முக்கியத்துவமும், வட்டார தேவைகளுக்கு ஏற்ப கலைத்திட்டத்தைக்கற்றலை விரிவுப்படுத்துதல் தேர்வு எழுதினோம்
  தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் மூன்றாம்,நான்காம் ஐந்தாண்டு திட்டங்கள் தேர்வு எழுதினோம்.
  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் படிப்பதை எவ்வாறு நினைவில் வைத்திருப்பது என்பதை கற்றுக்கொடுத்தார்.
  பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் விரிகள கலைத்திட்டம் படித்து கொண்டிருந்தோம்.
  அடுத்த பிரிவு வேளையில் குறுகிய காலக்கட்டத்தில் தேர்வுக்கு எவ்வாறு தயார் செய்வது என்பதை கற்றுக்கொடுத்தார்.