Thursday, 28 December 2017

today

இன்று உலகளாவிய பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. முதல் பிரிவில் கற்றலை மாணவர்களிடம் சென்றடையவேண்டும் என்பதை டாக்டர். பி.சீனிவாசன் அவர்கள் கற்பித்தார். அதில் ஆசிரியர் மாணவர்கள் இடையே வகுப்பறைகளில் கவனம், கருத்து உருவாக்கம் , செய்து காட்டல்,பிரச்சினைகளைத்தீர்த்தல் போன்றவை செயல்படுத்துதல் போன்றவை கற்றுகொடுத்தார்.
   அடுத்த பிரிவுவேளையில் கஃப் ஆஃப் டீ, கஃப் ஆஃப் டீச் என்ற தலைப்பில் டாக்டர்.கே.தியாகு சூர்யா அவர்கள் கற்று கொடுத்தார். அதில் குழந்தைகளுக்கு,குமரபருவத்தினர்,தானாக முடிவெடுத்தல்,ஒப்பார்குழுவுடன் இணைந்து  கற்றல்,புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து கற்றல் போன்றவைப்பற்றி புதுமையான முறையில் ஆசிரியர் கற்பித்தல் அறிந்து கொண்டோம்.

Friday, 22 December 2017

today

இன்று பாடங்கள் மற்றும் பாடப்பொருளைப் புரிந்துகொள்ளலில் பள்ளி கலைத்திட்டத்தில் ஒரு பாடத்தினை சேர்ப்பது அல்லது நீக்குவதற்கான காரணங்கள், சமூக மறுசீரப்பமைப்பிற்காக சமூக கலைத்திட்டம், பாடப்பிரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள்,கற்பவர் மைய கலைத்திட்டம், மாணவர் மையக்கலைத்திட்டத்தை தயார் செய்தல் போன்றவை தேர்வு எழுதினோம்.

Thursday, 21 December 2017

today

இன்று கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் வகுப்பறையில் தகவல் தொடர்பு செயல்பாடு,வினாக்கேட்டலின் வகைகள்,வாய்மொழியின் முக்கியத்துவம்,படித்து பொருளுணர்தலும்,பாதிக்கும் காரணிகள்,இடைவினைத்தன்மை புரிந்து கொள்ளும் தன்மை போன்றவை தேர்வு எழுதினோம்.
   பாலினம்,பள்ளி மற்றும் சமுதாயத்தில் பள்ளி பாட நூல்களிலும், கலைத்திட்டங்களிலும் பாலின பங்கு பணிகள்,ஒருங்கிணைத்தல்,பலத்தரப்பட்ட பண்பாட்டு வரம்புகளுக்குள் காணப்படும் பாலினப்பிரச்சனைகள் போன்றவைப் தேர்வு எழுதினோம்.

Wednesday, 20 December 2017

today

இன்று கற்றல் கற்பித்தல் தேர்வில் உள்ளொளிக்கற்றல்,அறிதிறன் வளர்ச்சி,மாஸ்லோவின் தேவை படிநிலைகள்,கற்போர் மைய கற்பித்தல் தேர்வு எழுதினோம்.
   அடுத்த பிரிவு வேளையில் பாலினமும்,பள்ளிக்கலைத்திட்டமும் படித்து கொண்டிருந்தோம்.

Monday, 18 December 2017

today

நாங்கள் இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் கல்வியில் சமுத்துவமின்மை,வேற்றுமை பாரட்டல் மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுதல் மற்றும் பண்டைய கல்வி முறைகள் போன்ற அலகுகளிலிருந்து பத்து வினாக்கள் கேட்கப்பட்டது.நாங்கள் ஏழு வினாக்கள் தேர்வு செய்து எழுதினோம்.

  அடுத்த பிரிவு வேளைகளில் கற்றலும் கற்பித்தலும் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தோம்.

Sunday, 17 December 2017

today

இன்று காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் தேர்வு எழுதினோம்.
   தேர்வில் பத்து கேட்கப்படுவதில் நாங்கள் ஏழு வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும்.
   விளிம்புநிலையுள்ள குழந்தைகளைப்பற்றியும் அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளும், பிரச்சனை தோன்றுவதற்கான காரணங்களும்,கல்வி பெறச்செய்திடும் வழிமுறைகளும் அதிகமாக கேட்கப்பட்டது.
      அடுத்த பிரிவு வேளைகளில் அடுத்த தேர்வான தற்கால இந்தியாவும் கல்வியும் படித்து கொண்டிருந்தோம்.

Saturday, 16 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் ஆசிரியர் மைய கற்பித்தல் விரிவுரை முறை தேர்வு எழுதினோம்.்

   கற்றல் கற்பித்தல் பாட வேளையில் மாணவர் மைய கற்பித்தல் ஆசிரியர் மைய கற்பித்தல் முறைகளை தெரிந்து கொண்டோம்.

   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் கோத்தாரி கல்வி குழு அறிக்கைகள் அறிந்து கொண்டோம்.

  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளிம்பு நிலை குழந்தைகளின் பிரச்சனைகள் தீர்க்க வேண்டிய முறைகளை கற்று கொண்டோம்.

  அடுத்த இரு பாட வேளைகளிலும் குழந்தை பருவ வளர்ச்சி நிலைகளிலுமுள்ள குழந்தை மேம்பாட்டில்,சமூகவியல்பாக்கும் முகமைகள் பற்றி தெரிந்து கொண்டோம். மேலும் பாலின வார்ப்பட்ட எண்ணங்களும்,பாலின பொறுப்புகளும் தெரிந்து கொண்டோம்.
  

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் ஆசிரியர் மையகற்பித்தல் , விரிவுறை கற்பித்தல்  முறை , செயலபாடு கற்பித்தல் முறை , குழு கற்பித்தல் முறை பற்றி தேர்வு எழுதினேன் . குழந்தைபருவமும் மற்றும் வளர்ச்சியும் விளம்பு நிலைகுழந்தைகள் ,தெரு குழந்தைகள் , சமுகத்தால் ஒதுக்கப்பட்ட குழந்தைகள் , நகர்புங்களில் வாழும் விளிம்பு நிலை குழந்தகைள் பற்றி படித்தேன் 

Friday, 15 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் கற்பித்தல் முறைகளைப்பற்றி கலந்துரையாடினோம்.
  கற்றல் கற்பித்தல் பாடவேளையில் காக்னே அறிவு கட்டமைப்பு கற்றல் படித்துகொண்டிருந்தோம்.
     தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சிகளை விவாதித்து கொண்டிருந்தோம்.
   குழந்தைபருவமும் வளர்ச்சியும் பாடவேளையில் இளம்பருவத்தினரிடம் ஆண்தன்மை பெண்தன்மை பள்ளிகளில் ஏற்றலும் மறுத்தலும் தேர்வு எழுதினோம்.
   கலைத்திட்டதில் விரவியுள்ள மொழியில் வகுப்பறைக் கற்பித்தலில் தாய்மொழியின் இடங்களைப்பற்றி படித்து கொண்டிருந்தோம்.
   உடற்பயிற்சி பாடவேளையில் மாரத்தான் ஓட்டப்பந்தியம் எவ்வாறாக மேற்கொள்வது பற்றி தெரிந்து கொண்டு பயிற்சி செய்தோம்

Thursday, 14 December 2017

Today

இன்று பல்வகை தூண்டல்கள் பயன்படுத்தி புதிர்களை பயன்படுத்தும்முறை கற்பிக்கப்பட்டது , விளிம்புநிலைக்குழந்தைகள் , அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகைகள் பற்றி தேர்வு எழுதினேன் . காக்னேயின் படிநிலைக் கற்றல் கொள்கை /எட்டு வகை அறிவுசார்திறன் பற்றி தேர்வு எழுதினேன் . தாய்மொழிக்கல்வி கற்றல் பற்றி படித்தேன்.

Wednesday, 13 December 2017

Today

இன்று பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்திலிருந்து உட்ஸ் அறிக்கை 1854 வரைவு பற்றி தேர்வு எழுதினேன் . அறிவுக் கட்டமைப்புக் கொள்கையின் கற்பித்தல் அணுகுமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன் . அண்மைக்காலத்தில் பள்ளிக்கலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முனனேற்றங்கள் பற்றி தேர்வு எழுதினேன் .

Tuesday, 12 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் குழுவாக அறிவியல் சார்ந்த பதில்களை கண்டறிந்தோம்.
 
   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் இணைந்து கற்றல் தேர்வு எழுதினோம்.
   
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் வேதகால கல்வி முறை தேர்வு எழுதினோம்.
   
   குழந்தை பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் பாலின வார்ப்பட்ட கருத்துகள் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
   
   பாடத்தினை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் கலைத்திட்டம் படித்து கொண்டிருந்தோம்.
   
   உடற்பயிற்சி பாடவேளையில் உடற்பயிற்சியினை மேற்கொண்டோம்.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் வினா விடை , சிறுவினாவிடை அகியவை நடைபெற்றது . பாலின வார்படக்காரணிகள் பற்றி தேர்வு எழுதினேன் . முஸ்லிம் கல்வி முறை பற்றி தேர்வு எழுதினேன் . இனைந்திடக்கற்றல் முறை பற்றி தேர்வு எழுதினேன் .

Monday, 11 December 2017

today

பொருளறிவியல்  கற்பித்தல் பாட வேளையில் மூன்று  குழுவாக பிரிந்து ஒரு குழுவினர் வினாக்களை கேட்க மற்ற குழுவினர் பதில்களை கண்டறிந்தோம்.   
   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் அறிவு கட்டமைத்திடுவதில் ஆசிரியரின் பங்கு பணிகள் தேர்வு எழுதினோம்.                                                         தற்கால  இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் பழங்குடியினர்,மகளிர் கல்வி அளித்திடும் முறைகளை தேர்வு எழுதினோம்.                                                            குழந்தைபருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் பாலின வார்ப்பட்ட எண்ணங்களும், பொறுப்புகளும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
     கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் எவ்வாறாக எழுதுவது என்பதை தெரிந்து கொண்டோம்.
    கல்வியில் தகவல் தொடர்பு, தொழில்நுட்பத்தில் சக்திபுள்ளி எவ்வறாக உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்.

Today

இன்று வகுப்பறையில் புதிர்களை தீர்க்கும்முறையும் , பல்வேறு வகையான செயல்பாடுகள் பற்றியும் அறிந்தேன் . பாலின வார்ப்பட எண்ணங்களும் , பாலின பொறுப்புகளும் பற்றி வாய் மொழி தேர்வு நடைபெற்றது . வேதகால கல்வி மற்றும் புத்தமதக் கல்வியின் வேறுபாடுகள் ,சமணமதக் கல்வி பற்றி தேர்வு எழுதினேன் . பள்ளிக் கலைத்திட்டத்தில் ஒரு பாடத்தை சேர்த்தல் அல்லது விலக்கிடுவதரற்கான காரணங்களை பற்றி தேர்வு எழுதினேன் . அறிவைக் கட்டமைத்திடும் வகுப்பறையில் ஆசிரியரின் பங்கு பணிகள் பற்றி தேர்வு எழுதினேன் .

Saturday, 9 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் குழுவாக பல்வேறு திறன்களை கலந்துரையாடினோம். கற்றல் கற்பித்தல் பாடவேளையில் ஆசிரியர் பணியின் முக்கியத்துவத்தை கலந்துரையாடினோம். தற்கால இந்தியாவும் கல்வியும் பிரிவு வேளையில் சமுக சமுத்துவமின்மை படித்து கொண்டிருந்தோம். குழந்தைபருவமும் வளர்ச்சியும் பிரிவு வேளையில் சமுக சமுத்துவமின்மையில் குடும்பம்,பள்ளி சிறுதேர்வு எழுதினோம்.பாடங்களைபுரிந்துகொள்ளும் பிரிவுவேளையில் கருத்தரங்கம் நடைபெற்றது. உடற்பயிற்சி வேளையில்   அனைவரும் விளையாடினோம்.

Friday, 8 December 2017

today

நாங்கள் இன்று ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் மாண்ஸ்போர்ட் பள்ளிக்குச் சென்றோம். அப்பள்ளியில் எங்கும் பசுமை நிறைந்ததாகவும், குளுமை நிறைந்ததாகவும் காணப்பட்து. அப்பள்ளியின் முதல்வர் பள்ளயின் வரலாற்றினையும், அப்பள்ளியின் ஆசிரியர் எலிசபெத், பள்ளி எவ்வாறு நடைபெறும் என்கின்ற வறைமுறையினையும் கூறினார். விளையாட்டு மைதானம் மிகவும் பெரியதாக அமைந்திருந்தது. அப்பள்ளியில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்தும் அளிக்கப்படுகிறது.மேலும் அப்பள்ளியில் வெளிநாட்டு நாகரிகம் பின்பற்றப்படுகிறது.மாணவர்கள் ஒழுக்கமாகவும்,எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர். அங்கு ஆங்கிலம், பிரான்சு,  ஹிந்தி பயிற்று மொழியாக அமைந்துள்ளது. மேலும் நாங்கள் நீச்சல் குளம் மற்றும் அருங்காட்சியம் போன்றவற்றை பார்த்தோம்.

Thursday, 7 December 2017

today

முதல் பிரிவு வேளையில் புதிர்களை தீர்க்கும் முறையைப்பற்றி அறிந்து கொண்டோம்.
  
   இரண்டாம் பிரிவு வேளையில் அறிவு கட்டமைப்பு தன்மைப்பற்றி சிறுதேர்வு எழுதினோம்.
   
   மூன்றாம் பிரிவுவேளையில் சமுக சமுத்துவமின்மை வகைகள் தேர்வு எழுதினோம்.

     நான்காம் பிரிவு வேளையில் சமூகவியல்பாக்கும் முகமைகள் பற்றி  குழு கலந்துரையாடினோம்.
   
    ஐந்தாம் பிரிவு வேளையில் கலைத்திட்டதிற்கான பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்தலின் தகுதிப்பாடுகள் தேர்வு எழுதினோம்.
  
     அதனை தொடர்ந்து சமூக நெறிப்படுத்தலின் வகைகள் பற்றி குழு கலந்துரையாடினோம்.

today

இன்று சமூகவியல்பாக்கல் என்பதன் பொருள் , வரையறை , குடும்பம் , பள்ளி , சமுதாயம் ,என்னும் சமுவியல்பாக்கலின் முகமைகள் பற்றி தேர்வு எழுதினேன் . வேதகாலக் கல்வி முறை ,பத்தமதக் கல்விமுறை பற்றி தேர்வு எழுதினேன் . அறிவுக்கட்டமைப்பை உருவாக்கிடுதல் என்பதன் பொருள் , வரையறை , அறிவைக் கட்டமைத்துக் கொள்ளும் கற்பவரின் தன்மை பற்றி தேர்வு எழுதினேன் .  படித்துப் பொருளுணர்தலும்  அதனை பாதிக்கும் காரணிகளும் , படித்துப் பொருளுனரும் தறன்களை மேம்படுத்திடல் பற்றி தேர்வு எழுதினேன் .

Wednesday, 6 December 2017

today

இன்று பொருளறிவியல் பாடவேளையில் ஆசிரியர் குறிப்புகளை வழங்கினார்.

   அதனை தொடர்ந்து கற்றல் கற்பித்தலில் விளைபயன்மிக்க கற்றல் மற்றும் விளைபயனற்ற கற்றலின் பண்புகளைப்பற்றி தெரிந்து கொண்டோம்.
   
    தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் சமுக சமத்துவமின்மையின் வகைகளை படித்து கொண்டிருந்தோம்.
     
     கலைதிட்டத்தில் விரவியுள்ள மொழியில் குறிப்பெடுத்தல், அதனின் வகைகளும் பற்றி தெரிந்து கொண்டோம்.நூலக பிரிவுவேளையில் அனைவரும் நூலகத்தில் அமைதியாக புத்தகங்களை படித்து கொண்டிருந்தோம்.

Today

இன்று புதிர்களை தீர்க்கும் முறையை பற்றியும் அறிந்தேன் . கல்விதிட்டமிடல் மற்றும் கல்விதிட்டமிடலின் முக்கியத்துவங்கள் , ஐந்தாண்டு திட்டங்கள் , திட்டகுழுவின் மறுவடிவம் , நிதி ஆய்வகம் , குழுவின் அங்கங்கள் கல்வியின் நிதிஉதவி , பொருளுதவியின் முக்கியக்கொள்கைகள் பற்றியும் அறிந்தேன் . முழுமையான ஆற்றலுடன செயல்படுபவரின் இயல்புகள் பற்றி தேர்வு எழுதினேன் . கலைத்திட்டத்திற்கான பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்தலின் தகுதிப்பாடுகள் பற்றி தேர்வு எழுதினேன் .

Tuesday, 5 December 2017

Today

இன்று குழந்தை மேம்பாட்டில் சமுகவியல்பாக்கும் முகமைகள் பற்றி சமூகவியல்பாக்கல் , அவற்றின் முக்கியத்துவங்களையும் அறிந்தேன் . தாய்மொழி கற்றல் நன்மைகள் ஆங்கிலம் மொழியை கற்பதன் மூலம் நடைபெறும் பயன்கள் , நடப்பாண்டுகளில் பயன்படுத்தப்படும் கற்றல் முறைகளை பற்றி தேர்வு எழுதினேன் .

Monday, 4 December 2017

today

சக்தி புள்ளி எவ்வாறு உருவாக்குவது என்பதை செய்முறை வடிவில் கற்று கற்றுகொண்டேன்.
         
    இதில் படத்தை உள்ளே நுழைத்தல் என்பதையும் அறிந்து கொண்டேன்.
           
    இவை படங்கள்,கருத்துகள்,தகவல்கள் மேலும் சிறப்பாக விளக்க உதவுகின்றது.

    கணினியில் ஸிலைடில் நுழைக்க விரும்பும் படம் இருந்தால்,படத்தினை தேர்வு செய்து கமண்ட் கிளிக் செய்ய வேண்டும்.

    மேலும் அட்டவணை சக்தி புள்ளியில் எவ்வாறு சேர்ப்பது பற்றியும் கற்று கொண்டேன்.

   ஸ்லைடு உருவாக்குவதையும்,எழுத்துக்களை பெரிதாக்குவது,சிறியதாக்குவது,மற்றும் எழுத்துகளில் வண்ணம் சேர்ப்பது போன்றவற்றை அறிந்து கொண்டேன்

Today

இன்று செயல்திட்ட முறைகளின் நன்மைகள் , குறைகள் , புதிர்களை திர்க்கும் முறை , புதிர்களை திர்க்கும் முறைகளில் இடம் றெக்கூடிய படிநிலைகள் அவற்றின் நன்மைகள் , குறைகள் பற்றியும் அறிந்தோன் . உலகமயமாக்கலின் தாக்கங்கள் அவற்றின் நன்மைகள் தீமைகள் , உலகமயமாக்கலினால் குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி அறிந்தேன் .    தேசிய அறிவாண்மை மையத்தின் குறிக்கோள்கள் , ஏற்றுக்கொள்ளுதல் , கருத்துக்கள் , உருவாக்குதல் , பயன்படுத்துதல் , சேவைகள் , குவியப்படுத்தக்கூடியவை பற்றி அறிந்தேன். மாஸ்லோவின் படிநிலைத்தேவைகள் பற்றி தேர்வு எழுதினேன் .   கற்பவர் மையக் கலைத்திட்டம் , பாடத்தொகுப்பு மற்றும் பாடப்புத்தகம் வடிவமைப்பு மாதிரி செயல்பாடுகளுக்கான பணி பட்டியல் , பாடத்தொகுப்பு மாதிரியில் பத்தாம் வகுப்புப் பாடத்தொகுப்பு , அவறறின் நோக்கங்கள் கற்பவர் மையப் பாடப்புத்தகம் தயாரித்தல் கலைத்திட்டத்தை பற்றி கற்றறிந்தேன் .

Thursday, 30 November 2017

Today

இன்று மாணவர் மையகற்பித்தல் முறைகள் , அணிகற்பித்தல் முறைசார்ந்த செயல்பாடுகள் , அணிகற்பித்தலின் வகைகள் , ஆய்வகமுறை , ஆய்வகமுறையின் பயன்கள் மற்றும் குறைகள் . அறிவியல்முறை , அறிவியல் முறையில் பின்பற்றகூடிய படிநிலைகள் , செயல்திட்டமுறை அவற்றின் கோட்பாடுகள் , செயல்திட்ட முறைகள் உடைய படிநிலைகள் பற்றி அறிந்தேன் . நீர் மாசுபாடு , இரைச்சல் மாசுபாடு இருவகையான இயற்கை , செயற்க்கை மூலங்கள் , குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள் தாராளமயமாக்கல் , தனியார்மயமாக்கள் பற்றி அறிந்தேன். தேசிய அளவிலான கலைத்திட்டத்தின் குறிக்கோள்கள் , முக்கியத்துவங்கள் , கலைத்திட்டத்தில் இடம்பெறக்கூடிய செயல்பாடகள் , தேர்வு முறையிலான மறுசிரமைப்பு , பாடத்திட்ட மேம்பாடு , ஒருங்கினைந்த ஆளுமைவளர்ச்சி ,கூட்டுறவு . இந்திய சிந்தைனையாளர்களின் சேமிப்பாகம் . மாணவர்களைக் கற்றல் செயல்களில் ஈடுபடச் செய்தலை மேம்படுத்திடும் வழிமுறைகள் , ஆரோக்கியமான வகுப்பறை மேலாண்மையும் , மாணவர்களது கல்வி அடைவும் பற்றி அறிந்தேன் . குறிப்பிட்ட பாடப்பகுதிகளில் , சிறப்பாக எழுதுவதற்காக , எழுதுதல் திறன்களை மேம்படுத்துதல் .வகுப்பறையில் பாடப்பகுதிகளை நன்கு கற்பதற்கு உதவிடும் வகையில் வாய்மொழிப் பயன்பாட்டை மேம்படுத்தும் உத்திகள் பற்றி அறிந்தேன் 

Wednesday, 29 November 2017

Today

இன்று ஆசிரியர் மையக் கற்பித்தல் முறை அல்லது குழுகற்பித்தல் என்பதன் பொருள் , வரையறை , ஆசிரியர் மையக் கற்பித்தலின் நன்மைகள் , குறைகள் , கோட்பாடுகள் . மாணவர் மையகற்பித்தல் முறைகள் பற்றி அறிந்தேன் . இஸ்லாமியக் கல்வி முறை , அவற்றின் முக்கியத்துவம்  கல்வியின் குறிக்கோள்கள் , கற்பிக்கும் முறைகள் அகியவற்றை பற்றி அறிந்தேன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை என்பதன் பொருள் , ஆசிரியர் மாணவர்கள் இடையே நேர்மறை உறவு நிலவும் வகுப்பறையில் காணப்படக் கூடியவை அவற்றின் அவசியம் , ஆசிரியர் மாணவர் நல்லுறவை வளர்த்திடும்வதற்கான ஆலோசனைகள் பற்றியும் அறிந்தேன் . சமுதாய மையக் கலைத்திட்டம் சமுதாய மறுசீரமைப்பற்கான சமுதாய மையக் கலைத்திட்டம் கற்பவர் மையக்கலைத்திட்டம் , பாடத்தொகுப்பு மற்றும் பாடப்புத்தகம் வடிவமைத்தல் கலைத்திட்ட வடிவமைப்பு பற்றியும் அறிந்தேன் .

today

இன்று ஆசிரியர் மையக் கற்பித்தல் முறை அல்லது குழுகற்பித்தல் என்பதன் பொருள் , வரையறை , ஆசிரியர் மையக் கற்பித்தலின் நன்மைகள் , குறைகள் , கோட்பாடுகள் . மாணவர் மையகற்பித்தல் முறைகள் பற்றி அறிந்தேன் . இஸ்லாமியக் கல்வி முறை , அவற்றின் முக்கியத்துவம்  கல்வியின் குறிக்கோள்கள் , கற்பிக்கும் முறைகள் அகியவற்றை பற்றி அறிந்தேன் . ஆசிரியர் மாணவர் உறவுமுறை என்பதன் பொருள் , ஆசிரியர் மாணவர்கள் இடையே நேர்மறை உறவு நிலவும் வகுப்பறையில் காணப்படக் கூடியவை அவற்றின் அவசியம் , ஆசிரியர் மாணவர் நல்லுறவை வளர்த்திடும்வதற்கான ஆலோசனைகள் பற்றியும் அறிந்தேன் . சமுதாய மையக் கலைத்திட்டம் சமுதாய மறுசீரமைப்பற்கான சமுதாய மையக் கலைத்திட்டம் கற்பவர் மையக்கலைத்திட்டம் , பாடத்தொகுப்பு மற்றும் பாடப்புத்தகம் வடிவமைத்தல் கலைத்திட்ட வடிவமைப்பு பற்றியும் அறிந்தேன் .

Tuesday, 28 November 2017

Today

இன்று பாடத்திட்டம் பற்றி தேர்வு எழுதினேன் , நகர்மயமாக்கலில் குழந்தைகளின் இயல்பு , உடல் வளர்ச்சி , அறிவு வளர்ச்சி , மனவெழுச்சி வளர்ச்சி , சமுக வளர்ச்சி , ஒழுக்க வளர்ச்சி . மக்கள் தொகை வளர்ச்சி மக்கள் தொகை அடர்த்தியும் குழந்தை வளர்ச்சி மீது அதன் தாக்கங்களையும் கற்றறிந்தேன் . ஆசிரியர் மாணவர் உறவு முறை ஆசிரியர் மாணவர்கள் இடையை நேர்மறை உறவு நிலவும் வகுப்பறையில் காணப்படக் கூடியவை பற்றியும் அறிந்தேன் . பல்வேறு பண்பாட்டு பின்னணி உடைய மாணவர்களைக் கொண்ட வகுப்பில் கற்பிப்பதில் உள்ள சவால்கள் , பாடப்பொருள் விளக்கப்டும் பகுதிகளில் படிித்துப்பொருள் உணர்தலின் தன்மைகள் , பாடப்பகுதிகளை படித்தறிவதற்கான உத்திகள் பற்றியும் அறிந்தேன் .

Monday, 27 November 2017

Today

இன்று மிச்சிறு கற்பித்தல் தேர்வு எழுதினேன். குழந்தை வளர்ச்சி மீது நகர்மயமாக்கலும் பொருளாதார மாற்றமும் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ,நகர்மயமாக்கலும் , குழந்தை வளர்ச்சிமீது அதன் தாக்கங்களும் ,அவற்றின் நன்மைகள் , தீமைகள் , கற்பிக்கப்பட்டது . அறிவுக்கட்டமைப்பை உருவாக்கும் கொள்கை பற்றியும் , அறிவுக்கட்டமைப்பு என்பதன் பொருள் , வரையறை , அறிவுக்கட்டமைப்புக் கொள்கையின் இரு அணுகுமுறைகள் பற்றியும் அறிந்தேன்.
கற்போரைமைகக் கொண்ட கலைத்திட்டம் அவற்றின் அணுகுமுறை கலைத்திட்ட வடிவமைப்பு வகைகள் பற்றி கிளேன் என்பவரது குறிப்புகள்  தனிப்பாட கலைத்திட்டம் ,இடைத்தொடர்புள்ள கலைத்தட்டம்  ,விரிகள கலைத்திட்டம் , உள்மையக் கலைத்திட்டம் , அனுபவநிலை கலைத்திட்டம் , செயல்நிலைக் கலைத்திட்டம் , வாழ்க்கைமையக்கலைத்திட்டம் . பாடப்பிரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள் அவை உளவியல் தன்மையின்மை , பாடம் சார்ந்வை , கற்பவர் தேவை கருதாமை ,கருத்துகள் தொகுப்பின்மை , நவீன காலப் பொருத்தமின்மை , பாடங்களுக்கிடையே தொடர்பின்மை , நடைமுறைப் பயன்பாடின்மை , தனியாள் முன்னேற்றமின்மை , கற்பவரின் பங்கேற்பின்மை , தனிப்பட்ட கற்றல் .கற்பவர் மையக் கலைத்திட்டத்தின் நிறைகள் . உளவியல் பின்புலம் , மாணவர்களின் சுறுசுறுப்பான பங்கேற்பு , மாணவர் கற்றலின் சுதந்திரம் , பிறபாடத்தொடர்பு , சுயமுன்னேற்றம் , நடைமுறைப் பயன்பாடு பற்றி அறிந்தேன் .

Friday, 24 November 2017

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் திறன்களை பயிற்றுவித்தல் முன்னறிவுத் தொடர்பு ஏற்றவிடை தந்தவை தொடர்சரசி தொடங்கு தொடர் தொடர் இணைப்புச் சொற்கள் திறனறி வினாக்கள்  சாதாரண வினாக்கள் இடைநிலை வினாக்கள் உயர்நிலை வினாக்கள் பற்றி முன்வகுப்புகளில் கற்பிக்கப்பட்டவை பற்றி மாணவர்களுடன் கருத்துரையாடல் நடைபெற்றது . ஊடகங்களும், குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு  தகவல் பரப்பு ஊடகங்களின் வகைபாடு ,  ஊடகங்களின் தாக்கம் பற்றி இன்று வகுப்பறையில் கருத்துரையாடல் நடைபெற்றது. பாலினம் சார்ந்த கலைத்திட்டம்  பாலியல்சார் தகவல்களையும் பாலினம் வார்ப்பட  எண்ணங்கள் மீது ஊடகங்களின் தாக்கம் பற்றி மாணவர் கருத்துரை நடைபெற்றது அவற்றில் மாணவர், ஆசிரியர் உரையாடல்கள் நடை பெற்றது . கற்பவர் மையக் கலைத்திட்டம் பற்றி மாணவர் மையக் கலைத்திட்டம் , பாடப்பிரிவு மையக் கலைத்திட்டம் ,பாடப்பரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள் பற்றி படித்தறிந்தேன் .

Thursday, 23 November 2017

Today

இன்று குழந்தைப் பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடத்தில் இனம் மற்றும் பாலினம் சார்ந்த வார்ப்பட எண்ணங்கள் மீது ஊடகங்களின் தாக்கத்தில் ஊடகங்கள் சில கதாபாத்திரங்களில் சில இனத்தவரையே தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பதைப்பார்க்கலாம். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும், கல்விக்காகவும் ,வேலைக்காகவும் சென்று தங்கியுள்ள இந்தியர்களும் இனவெறித்தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். பண்பாட்டு அகந்தை ஓங்கி வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகப் பயன்பாட்டை நலமளிப்பதாக நெறிமுறைப்படுத்துதல், குழந்தைகளின் பெற்றோர்கள்/பராமரிப்பவர்களது வழப்புணர்வு, பெற்றோர்கள் குழந்தைகளோடு மனம் விட்டு விவாதித்தல், தொழில்நுட்பத்தீர்வுகள், மருத்துவ சேவையை வழங்கிடுவோரது பங்கு பணிகள், சமுதாயத்தின் பொறுப்புகள், இலாப நோக்கமின்றி செயலபடும் நிறுவனங்களின் தொண்டு, பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை நல ஊழியர்கள் , குழந்தைகளை உடற்பயிற்சி , விளையாட்டுகள் , யோகா மற்றும் தியானம் , கைவினைப் பொருட்கள் தயாரித்தல் போன்ற செயல்கள் பற்றி அறிந்தேன் . பியாஜே வின் அறிதிறன் வளர்ச்சி , பற்றி தேர்வு எழுதினோன் .பன்மொழி பயன்பாடு , இருமொழி /பன்மொழிகள் பேசும் இந்தியக்குழந்தைகளுக்கு ஆங்கலத்தை இரண்டாவது மொழியாகக்கற்பித்தலில் எதிர்படும் சிக்கல்கள் பற்றி வகுப்பறையில் கற்றறிந்தேன் ,மொழிக்கற்பித்தலில் உள்ள இரு அணுகுமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன்.

Wednesday, 22 November 2017

today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் என்பதன் பொருள், கற்றல் திறன்களை அறிந்துகொள்ளுதல் பற்றி தேர்வு எழுதினேன்.  குமரப்பருவத்தினரது வளர்ச்சி மேம்பாட்டில் சமூக ஊடகங்களின் தாக்கம் பற்றி கற்பிக்கப்பட்டது அவற்றில்மனிதன் தொலைப்பேசியில் பேசவும், கணினியை பயன்படுத்தவும், அதில் அதிக நேரம் செலவிடவும், சமூக ஊடகத்தில் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற கருத்தையும் ,சமூக வலைத்தளங்களின் மூலம் கல்வியில் எற்படும் நன்மைகள் பற்றியும், சமூகவியல்பாக்கலும், தகவல் தொடர்பு, கற்கும் வாய்ப்புகள் அதிகரிப்பு, உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பெற்றிடுதல் , ஊடகத்தின் தீமைகள், வன்முறைகளின் தாக்கங்கள் பற்றி பெரசின் என்பவர் கருத்து ,ஆல்பர்ட் பண்டூராவின் கருத்து , ஜெனரல் தலைமையிலான குழு பற்றியும் அறிந்தேன். டெலார் குழு அறிக்கையின் நான்கு தூண்கள் அறிந்திடக்கற்றல், செய்திடக்கற்றல், ஒன்றுகூடிகற்றல், தனித்தன்மையுடன் கூடிய குழுகற்றல், எஸ்.எஸ்.எ, ஆர்.எம்.எஸ் எ பற்றியும் தேர்வு எழுதினேன். கற்றல் கற்பித்தலில் பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி, கோல்வின் வளர்ச்சி பற்றியும் படித்தோன். பாடத்துறைகளையும் பாடங்களையும் புரிந்து கொலள்ளல் வகுப்பில் கற்பவர் மையக் கலைத்திட்டம் பற்றி கலந்துறையாடல் நடைபெற்றது.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் நோக்கங்களுக்கான புளுமின் நோக்கவகைபாடு தேர்வு எழுதினேன் மற்றும் குழந்தையின்வளர்ச்சியை மேம்படுத்துவதில் விளையாட்டின் பங்கு பற்றியும் அவற்றின் உடல்வளர்ச்சி மனவளர்சி அறிதறன்வளர்ச்சி சமுகவளர்சி ஒழுக்கவளர்ச்சி அகியவை பற்றியும்,கல்வியில் மொழிக் கொள்கையில் சட்டப்பிரிவு,அவற்றின் உட்பிரிவுகளை பற்றியும் காந்திஜி , விவேகானந்தரின் கருத்துகள் , இரபீந்திரநாத் தாகூர் அகியவர்களின் கல்வியில் மொழிக்கொள்கைபற்றியும் அறிந்தேன்.  கற்றலில் பின்தங்கிக் காணப்படும் மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்துதல் மேற்பார்வையுடன் கூடிய கற்றல், தனிக்கவனம் அளித்தக் கற்பத்தல் பற்றியும் , மற்பர்வையுடன் கூடிய கற்றலை செயற்படுத்திடுவதற்கான திட்டங்களை பற்றியும் , செயலாற்றல்          குறைபாடுஉடைய மாணவர்களுக்கு சிறப்புக்கல்வி ஆசிரியர்களின் சேவை கிடைக்கச் செய்தல் பற்றி  கற்பிக்கப்பட்டது. 

Tuesday, 21 November 2017

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தல் திறனின் வகைபாடு பாடம் தொடங்குதல் விளக்குதல் திறன் பல்வகைத் தூண்டல்கள் வலுவூட்டிகளைப் பயன்படுத்துதல் வினாக்கள் கேட்கும் திறன் கரும்பலகையை பயன்படுத்தும் திறன் செய்துகாட்டி விளக்குதல் பாடம்முடித்தல் ,  திறனின் உட்கூறுகள் பற்றி தேர்வு எழுதினேன் . ஊடகங்களும் , குழந்தையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு , ஊடகங்கள் என்பதன் பொருள் அவற்றின் வகைகள் , இயல்புகள் , அச்சிட்ட எழுத்து வடிவிலான ஊடகம் , ஒலிசார் ஊடகம் , மின்னனு ஊடகம் , பொதுமக்கள் தகவல் பரப்புசாதனங்கள் , சமூக ஊடகம் பற்றி படித்தறிந்தேன் . புரூணர் அறிதிறன் வளர்ச்சி கொள்கையில் செயல்படு நிலை உருவக நிலை குறியீட்டு நிலை , புரூணரின் அறிதிறன் வளர்ச்சிப் படிநிலைக் கோட்பாட்டின் கல்வி தாக்கங்கள்  பற்றி தேர்வு எழுதினேன் , அவற்றை பற்றி கருத்து  பகிர்ந்து கொல்லப்பட்டது . மொழி தொடர்பான சிக்கல்கள் என்பதன் பொருள் , குழந்தைகள்  இருமொழிகளை பயன்படுத்துதல் மொழியே அவர்களுக்கு இடையே தகவல் பரிமாற்றத்திற்கான சாதனமாக விளங்குகின்றது இருமொழிப் பயன்பாடு பற்றியும் தாய்மொழியுடன் கூடிய வட்டாரமொழியையும் சரளமாக பேசுவோராக இருக்கின்றனர் என்பதை படித்தறிந்தேன்.

Monday, 20 November 2017

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் இடம்பெறக்கூடிய கற்பித்தல் முறைகள்,விரிவுரை முறை அவற்றின் சிறப்பம்சங்கள் ,துறைகள் பற்றியும் ஆசிரியர்கள் தன் கருத்துகளை வெளிப்படுத்தினார். விளையாட்டும் ,குழந்தையின் வளர்ச்சியும் பற்றி வாய் மொழி தேர்வு நடைபெற்றது. செயலாக்கத்திட்டம் அல்லது செம்மையக்கப்பட்டவடிவம் பற்றி  செயலாக்க திட்டத்தில் இடம்பெறகூடியநிலைகள், ஆரம்பகாலகல்விநிலை,இடைநிலைகல்விமுறை , மேல்நிலைகல்விநிலை, பொதுவான நிலை , செயலாக்கத்திட்டத்தின் முக்கியமானகூறுகள் பற்றி வகுப்பறையில் கற்பிக்கப்பட்டதது.
பள்ளிக்கு உள்ளே மற்றும் வெளியே கற்றல் , கற்றலின் முக்கிய அம்சங்கள், கற்றலின் நோக்கங்கள் , பள்ளிக்கு வெளியே கற்றலில் , உற்றுநோக்கிக்கற்றலின் முக்கியத்துவம் , கலைத்திட்டக் கற்றலை உள்ளூர் சமுதாயத்தோடு தொடர்புபடுத்துதல் , வகுப்பறைக்கு வெளியே கற்றலுக்கான அணுகுமுறைகள் , கள ஆய்வு அவற்றின் வேறுபாடுகள் அவற்றின் நன்மைகள், வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்தி கற்றல், பள்ளிக்கு வெளியே கற்றலின் வரம்புகள் பற்றியும் கற்பிக்கப்பட்டது, கற்போரை மையமாகக் கொண்ட கலைத்திட்டம் கற்பிக்கப்பட்டது

Friday, 17 November 2017

Today

இன்று பொருளறிவியல் துறையில் பாடத்திட்டம் என்பது யாது பாடத்திட்டம் மற்றும் அலகுத்திட்டம் தயார் செய்யும் போது இடம்பெறக்கூடிய படிநிலைகள் பற்றி தேர்வு எழுதினேன். குழந்தைளின் பன்முகவளர்ச்சியில் விளையாட்டின் பங்களிப்பு அவற்யை உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி, மனவெழுச்சி வளர்ச்சி, சமுக வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி பற்றி அறிந்தேன்.     மால்கம் ஆதிசேஷையா கமிட்டியின் அறிக்கை தோற்றமும் அதன் நோக்கங்களும்  , அவற்றின் பரிந்துரைகள் , இருபத்திஒன்றாம் நூற்றாண்டில் தேசிய கல்வி கொள்கையும் கல்விசார்ந்த மறுமலர்ச்சியும் பற்றி அறிந்தேன். சமூகபயன்மிக்க கலைத்திட்டம் பள்ளிபாடத்திட்டத்தில் புதிய புதிய கல்வியில் ஒவ்வொரு ஆண்டும் புதிய திட்டங்களை கொண்டுவரவும் அவற்றில் ஏற்படுத்திய மாற்றங்களையும் அவைகளில் கணிதம் பாடம், அறிவியல் பாடம் , சமூகஅறிவியல் பாடம் , பற்றி அறிந்துகொண்டேன்.

Thursday, 16 November 2017

today

இன்று பொருளறவியலின் இயல்பும் அமைப்பும் , அறிவியலின் குறிக்கோள்களை பற்றி தேர்வு எழுதினேன். குழந்தை பருவத்தினரின் வளையாட்டுக்கள் அவற்றில் விளையாட்டாக செய்தடும் செயல்கள்,தனித்து விளையாடும் விளையாட்டுக்கள், இணையாக விளையாடுதல், பார்வையாறாக விளையாடும் விளையாட்டு, உடன் பழகுமுறை விளையாட்டும் விளையாட்டு, கூட்டுறவு விளையாடும் விளையாட்டு.                    
விளையாட்டை பதிக்கக்கூடிய காரணிகள் ஒன்று சுற்றுச்சூழல் காரணி, உயிரியல் காரணி, மனித தொடர்புகள்,இடைவினைகள், குழந்தையின் தொடக்க காலத்தில் அமைந்திடும் சுற்றுசூழலும் அனுபவங்களும் பற்றி அறிந்தேன். சுதந்திர இந்தியாவிற்கு பின்கல்வியில் இருந்த கல்விகொள்கை பற்றி அவற்றில் கோத்தரிக்கல்விக் கொள்கையின் பரிந்துறைகள் அவற்றில் சமுகமாற்றத்திற்கான வகுதிட்டங்களை ஏற்படத்திட செய்வது,கல்வியின் தேசிய இலக்குகளை வரையறை செய்வது, உற்பத்தி கல்வி, தேசிய ஒற்றுமைக்கான கல்வியை கொடுத்திடுதல், பின்பற்றகூடிய கலைத்திட்டம்,கல்விஅமைப்பமுறை, ஈ
ஸ்வர்பாய் படேல் கல்விக்குழு, சமுகபயன் மிக்க ஆக்கசெயல்பாடுகள் குறித்தகல்வி, அவற்றில்தொழில்கள் பற்றியும் அறிந்தேன். மொழியின் கல்வித்தாக்கங்கள், வகுப்பறை இடைவினைத் தன்மையைப் புரிந்து கொள்ளுதல் அகியவற்றைபுரிந்துகொண்டேன்.

Monday, 13 November 2017

optics

Optics is the branch of physics which involves the behaviour and properties of light, including its interactions with matter and the construction of instruments that use or detect it. Optics usually describes the behaviour of visibleultraviolet, andinfrared light. Because light is an electromagnetic wave, other forms of electromagnetic radiation such as X-raysmicrowaves, and radio waves exhibit similar properties.
Most optical phenomena can be accounted for using the classical electromagnetic description of light. Complete electromagnetic descriptions of light are, however, often difficult to apply in practice. Practical optics is usually done using simplified models. The most common of these, geometric optics, treats light as a collection of rays that travel in straight lines and bend when they pass through or reflect from surfaces. Physical optics is a more comprehensive model of light, which includes wave effects such as diffraction and interference that cannot be accounted for in geometric optics. Historically, the ray-based model of light was developed first, followed by the wave model of light. Progress in electromagnetic theory in the 19th century led to the discovery that light waves were in fact electromagnetic radiation.
Some phenomena depend on the fact that light has both wave-like and particle-like properties. Explanation of these effects requires quantum mechanics. When considering light's particle-like properties, the light is modelled as a collection of particles called "photons". Quantum optics deals with the application of quantum mechanics to optical systems.
Optical science is relevant to and studied in many related disciplines including astronomy, various engineering fields,photography, and medicine (particularly ophthalmology and optometry). Practical applications of optics are found in a variety of technologies and everyday objects, including mirrorslensestelescopesmicroscopeslasers