Thursday, 28 December 2017

today

இன்று உலகளாவிய பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. முதல் பிரிவில் கற்றலை மாணவர்களிடம் சென்றடையவேண்டும் என்பதை டாக்டர். பி.சீனிவாசன் அவர்கள் கற்பித்தார். அதில் ஆசிரியர் மாணவர்கள் இடையே வகுப்பறைகளில் கவனம், கருத்து உருவாக்கம் , செய்து காட்டல்,பிரச்சினைகளைத்தீர்த்தல் போன்றவை செயல்படுத்துதல் போன்றவை கற்றுகொடுத்தார்.
   அடுத்த பிரிவுவேளையில் கஃப் ஆஃப் டீ, கஃப் ஆஃப் டீச் என்ற தலைப்பில் டாக்டர்.கே.தியாகு சூர்யா அவர்கள் கற்று கொடுத்தார். அதில் குழந்தைகளுக்கு,குமரபருவத்தினர்,தானாக முடிவெடுத்தல்,ஒப்பார்குழுவுடன் இணைந்து  கற்றல்,புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து கற்றல் போன்றவைப்பற்றி புதுமையான முறையில் ஆசிரியர் கற்பித்தல் அறிந்து கொண்டோம்.

Friday, 22 December 2017

today

இன்று பாடங்கள் மற்றும் பாடப்பொருளைப் புரிந்துகொள்ளலில் பள்ளி கலைத்திட்டத்தில் ஒரு பாடத்தினை சேர்ப்பது அல்லது நீக்குவதற்கான காரணங்கள், சமூக மறுசீரப்பமைப்பிற்காக சமூக கலைத்திட்டம், பாடப்பிரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள்,கற்பவர் மைய கலைத்திட்டம், மாணவர் மையக்கலைத்திட்டத்தை தயார் செய்தல் போன்றவை தேர்வு எழுதினோம்.

Thursday, 21 December 2017

today

இன்று கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் வகுப்பறையில் தகவல் தொடர்பு செயல்பாடு,வினாக்கேட்டலின் வகைகள்,வாய்மொழியின் முக்கியத்துவம்,படித்து பொருளுணர்தலும்,பாதிக்கும் காரணிகள்,இடைவினைத்தன்மை புரிந்து கொள்ளும் தன்மை போன்றவை தேர்வு எழுதினோம்.
   பாலினம்,பள்ளி மற்றும் சமுதாயத்தில் பள்ளி பாட நூல்களிலும், கலைத்திட்டங்களிலும் பாலின பங்கு பணிகள்,ஒருங்கிணைத்தல்,பலத்தரப்பட்ட பண்பாட்டு வரம்புகளுக்குள் காணப்படும் பாலினப்பிரச்சனைகள் போன்றவைப் தேர்வு எழுதினோம்.

Wednesday, 20 December 2017

today

இன்று கற்றல் கற்பித்தல் தேர்வில் உள்ளொளிக்கற்றல்,அறிதிறன் வளர்ச்சி,மாஸ்லோவின் தேவை படிநிலைகள்,கற்போர் மைய கற்பித்தல் தேர்வு எழுதினோம்.
   அடுத்த பிரிவு வேளையில் பாலினமும்,பள்ளிக்கலைத்திட்டமும் படித்து கொண்டிருந்தோம்.

Monday, 18 December 2017

today

நாங்கள் இன்று தற்கால இந்தியாவும் கல்வியும் பாடத்தில் கல்வியில் சமுத்துவமின்மை,வேற்றுமை பாரட்டல் மற்றும் விளிம்பு நிலைக்கு தள்ளப்படுதல் மற்றும் பண்டைய கல்வி முறைகள் போன்ற அலகுகளிலிருந்து பத்து வினாக்கள் கேட்கப்பட்டது.நாங்கள் ஏழு வினாக்கள் தேர்வு செய்து எழுதினோம்.

  அடுத்த பிரிவு வேளைகளில் கற்றலும் கற்பித்தலும் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தோம்.

Sunday, 17 December 2017

today

இன்று காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் தேர்வு எழுதினோம்.
   தேர்வில் பத்து கேட்கப்படுவதில் நாங்கள் ஏழு வினாக்களுக்கு பதில் எழுத வேண்டும்.
   விளிம்புநிலையுள்ள குழந்தைகளைப்பற்றியும் அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளும், பிரச்சனை தோன்றுவதற்கான காரணங்களும்,கல்வி பெறச்செய்திடும் வழிமுறைகளும் அதிகமாக கேட்கப்பட்டது.
      அடுத்த பிரிவு வேளைகளில் அடுத்த தேர்வான தற்கால இந்தியாவும் கல்வியும் படித்து கொண்டிருந்தோம்.

Saturday, 16 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் ஆசிரியர் மைய கற்பித்தல் விரிவுரை முறை தேர்வு எழுதினோம்.்

   கற்றல் கற்பித்தல் பாட வேளையில் மாணவர் மைய கற்பித்தல் ஆசிரியர் மைய கற்பித்தல் முறைகளை தெரிந்து கொண்டோம்.

   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் கோத்தாரி கல்வி குழு அறிக்கைகள் அறிந்து கொண்டோம்.

  குழந்தைப்பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் விளிம்பு நிலை குழந்தைகளின் பிரச்சனைகள் தீர்க்க வேண்டிய முறைகளை கற்று கொண்டோம்.

  அடுத்த இரு பாட வேளைகளிலும் குழந்தை பருவ வளர்ச்சி நிலைகளிலுமுள்ள குழந்தை மேம்பாட்டில்,சமூகவியல்பாக்கும் முகமைகள் பற்றி தெரிந்து கொண்டோம். மேலும் பாலின வார்ப்பட்ட எண்ணங்களும்,பாலின பொறுப்புகளும் தெரிந்து கொண்டோம்.
  

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் ஆசிரியர் மையகற்பித்தல் , விரிவுறை கற்பித்தல்  முறை , செயலபாடு கற்பித்தல் முறை , குழு கற்பித்தல் முறை பற்றி தேர்வு எழுதினேன் . குழந்தைபருவமும் மற்றும் வளர்ச்சியும் விளம்பு நிலைகுழந்தைகள் ,தெரு குழந்தைகள் , சமுகத்தால் ஒதுக்கப்பட்ட குழந்தைகள் , நகர்புங்களில் வாழும் விளிம்பு நிலை குழந்தகைள் பற்றி படித்தேன் 

Friday, 15 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் கற்பித்தல் முறைகளைப்பற்றி கலந்துரையாடினோம்.
  கற்றல் கற்பித்தல் பாடவேளையில் காக்னே அறிவு கட்டமைப்பு கற்றல் படித்துகொண்டிருந்தோம்.
     தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சிகளை விவாதித்து கொண்டிருந்தோம்.
   குழந்தைபருவமும் வளர்ச்சியும் பாடவேளையில் இளம்பருவத்தினரிடம் ஆண்தன்மை பெண்தன்மை பள்ளிகளில் ஏற்றலும் மறுத்தலும் தேர்வு எழுதினோம்.
   கலைத்திட்டதில் விரவியுள்ள மொழியில் வகுப்பறைக் கற்பித்தலில் தாய்மொழியின் இடங்களைப்பற்றி படித்து கொண்டிருந்தோம்.
   உடற்பயிற்சி பாடவேளையில் மாரத்தான் ஓட்டப்பந்தியம் எவ்வாறாக மேற்கொள்வது பற்றி தெரிந்து கொண்டு பயிற்சி செய்தோம்

Thursday, 14 December 2017

Today

இன்று பல்வகை தூண்டல்கள் பயன்படுத்தி புதிர்களை பயன்படுத்தும்முறை கற்பிக்கப்பட்டது , விளிம்புநிலைக்குழந்தைகள் , அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகைகள் பற்றி தேர்வு எழுதினேன் . காக்னேயின் படிநிலைக் கற்றல் கொள்கை /எட்டு வகை அறிவுசார்திறன் பற்றி தேர்வு எழுதினேன் . தாய்மொழிக்கல்வி கற்றல் பற்றி படித்தேன்.

Wednesday, 13 December 2017

Today

இன்று பிரிட்டிஷ் ஆட்சியின் தொடக்கத்திலிருந்து உட்ஸ் அறிக்கை 1854 வரைவு பற்றி தேர்வு எழுதினேன் . அறிவுக் கட்டமைப்புக் கொள்கையின் கற்பித்தல் அணுகுமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன் . அண்மைக்காலத்தில் பள்ளிக்கலைத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முனனேற்றங்கள் பற்றி தேர்வு எழுதினேன் .

Tuesday, 12 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் குழுவாக அறிவியல் சார்ந்த பதில்களை கண்டறிந்தோம்.
 
   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் இணைந்து கற்றல் தேர்வு எழுதினோம்.
   
   தற்கால இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் வேதகால கல்வி முறை தேர்வு எழுதினோம்.
   
   குழந்தை பருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் பாலின வார்ப்பட்ட கருத்துகள் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
   
   பாடத்தினை புரிந்து கொள்ளுதல் பாட வேளையில் கலைத்திட்டம் படித்து கொண்டிருந்தோம்.
   
   உடற்பயிற்சி பாடவேளையில் உடற்பயிற்சியினை மேற்கொண்டோம்.

Today

இன்று பொருளறிவியல் கற்பித்தலில் வினா விடை , சிறுவினாவிடை அகியவை நடைபெற்றது . பாலின வார்படக்காரணிகள் பற்றி தேர்வு எழுதினேன் . முஸ்லிம் கல்வி முறை பற்றி தேர்வு எழுதினேன் . இனைந்திடக்கற்றல் முறை பற்றி தேர்வு எழுதினேன் .

Monday, 11 December 2017

today

பொருளறிவியல்  கற்பித்தல் பாட வேளையில் மூன்று  குழுவாக பிரிந்து ஒரு குழுவினர் வினாக்களை கேட்க மற்ற குழுவினர் பதில்களை கண்டறிந்தோம்.   
   கற்றலும் கற்பித்தல் பாட வேளையில் அறிவு கட்டமைத்திடுவதில் ஆசிரியரின் பங்கு பணிகள் தேர்வு எழுதினோம்.                                                         தற்கால  இந்தியாவும் கல்வியும் பாட வேளையில் பழங்குடியினர்,மகளிர் கல்வி அளித்திடும் முறைகளை தேர்வு எழுதினோம்.                                                            குழந்தைபருவமும் வளர்ச்சியும் பாட வேளையில் பாலின வார்ப்பட்ட எண்ணங்களும், பொறுப்புகளும் குழு கலந்துரையாடல் நடைப்பெற்றது.
     கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் எவ்வாறாக எழுதுவது என்பதை தெரிந்து கொண்டோம்.
    கல்வியில் தகவல் தொடர்பு, தொழில்நுட்பத்தில் சக்திபுள்ளி எவ்வறாக உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்.

Today

இன்று வகுப்பறையில் புதிர்களை தீர்க்கும்முறையும் , பல்வேறு வகையான செயல்பாடுகள் பற்றியும் அறிந்தேன் . பாலின வார்ப்பட எண்ணங்களும் , பாலின பொறுப்புகளும் பற்றி வாய் மொழி தேர்வு நடைபெற்றது . வேதகால கல்வி மற்றும் புத்தமதக் கல்வியின் வேறுபாடுகள் ,சமணமதக் கல்வி பற்றி தேர்வு எழுதினேன் . பள்ளிக் கலைத்திட்டத்தில் ஒரு பாடத்தை சேர்த்தல் அல்லது விலக்கிடுவதரற்கான காரணங்களை பற்றி தேர்வு எழுதினேன் . அறிவைக் கட்டமைத்திடும் வகுப்பறையில் ஆசிரியரின் பங்கு பணிகள் பற்றி தேர்வு எழுதினேன் .

Saturday, 9 December 2017

today

பொருளறிவியல் கற்பித்தல் பாடவேளையில் குழுவாக பல்வேறு திறன்களை கலந்துரையாடினோம். கற்றல் கற்பித்தல் பாடவேளையில் ஆசிரியர் பணியின் முக்கியத்துவத்தை கலந்துரையாடினோம். தற்கால இந்தியாவும் கல்வியும் பிரிவு வேளையில் சமுக சமுத்துவமின்மை படித்து கொண்டிருந்தோம். குழந்தைபருவமும் வளர்ச்சியும் பிரிவு வேளையில் சமுக சமுத்துவமின்மையில் குடும்பம்,பள்ளி சிறுதேர்வு எழுதினோம்.பாடங்களைபுரிந்துகொள்ளும் பிரிவுவேளையில் கருத்தரங்கம் நடைபெற்றது. உடற்பயிற்சி வேளையில்   அனைவரும் விளையாடினோம்.

Friday, 8 December 2017

today

நாங்கள் இன்று ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் மாண்ஸ்போர்ட் பள்ளிக்குச் சென்றோம். அப்பள்ளியில் எங்கும் பசுமை நிறைந்ததாகவும், குளுமை நிறைந்ததாகவும் காணப்பட்து. அப்பள்ளியின் முதல்வர் பள்ளயின் வரலாற்றினையும், அப்பள்ளியின் ஆசிரியர் எலிசபெத், பள்ளி எவ்வாறு நடைபெறும் என்கின்ற வறைமுறையினையும் கூறினார். விளையாட்டு மைதானம் மிகவும் பெரியதாக அமைந்திருந்தது. அப்பள்ளியில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்தும் அளிக்கப்படுகிறது.மேலும் அப்பள்ளியில் வெளிநாட்டு நாகரிகம் பின்பற்றப்படுகிறது.மாணவர்கள் ஒழுக்கமாகவும்,எப்போதும் ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர். அங்கு ஆங்கிலம், பிரான்சு,  ஹிந்தி பயிற்று மொழியாக அமைந்துள்ளது. மேலும் நாங்கள் நீச்சல் குளம் மற்றும் அருங்காட்சியம் போன்றவற்றை பார்த்தோம்.

Thursday, 7 December 2017

today

முதல் பிரிவு வேளையில் புதிர்களை தீர்க்கும் முறையைப்பற்றி அறிந்து கொண்டோம்.
  
   இரண்டாம் பிரிவு வேளையில் அறிவு கட்டமைப்பு தன்மைப்பற்றி சிறுதேர்வு எழுதினோம்.
   
   மூன்றாம் பிரிவுவேளையில் சமுக சமுத்துவமின்மை வகைகள் தேர்வு எழுதினோம்.

     நான்காம் பிரிவு வேளையில் சமூகவியல்பாக்கும் முகமைகள் பற்றி  குழு கலந்துரையாடினோம்.
   
    ஐந்தாம் பிரிவு வேளையில் கலைத்திட்டதிற்கான பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்தலின் தகுதிப்பாடுகள் தேர்வு எழுதினோம்.
  
     அதனை தொடர்ந்து சமூக நெறிப்படுத்தலின் வகைகள் பற்றி குழு கலந்துரையாடினோம்.

today

இன்று சமூகவியல்பாக்கல் என்பதன் பொருள் , வரையறை , குடும்பம் , பள்ளி , சமுதாயம் ,என்னும் சமுவியல்பாக்கலின் முகமைகள் பற்றி தேர்வு எழுதினேன் . வேதகாலக் கல்வி முறை ,பத்தமதக் கல்விமுறை பற்றி தேர்வு எழுதினேன் . அறிவுக்கட்டமைப்பை உருவாக்கிடுதல் என்பதன் பொருள் , வரையறை , அறிவைக் கட்டமைத்துக் கொள்ளும் கற்பவரின் தன்மை பற்றி தேர்வு எழுதினேன் .  படித்துப் பொருளுணர்தலும்  அதனை பாதிக்கும் காரணிகளும் , படித்துப் பொருளுனரும் தறன்களை மேம்படுத்திடல் பற்றி தேர்வு எழுதினேன் .

Wednesday, 6 December 2017

today

இன்று பொருளறிவியல் பாடவேளையில் ஆசிரியர் குறிப்புகளை வழங்கினார்.

   அதனை தொடர்ந்து கற்றல் கற்பித்தலில் விளைபயன்மிக்க கற்றல் மற்றும் விளைபயனற்ற கற்றலின் பண்புகளைப்பற்றி தெரிந்து கொண்டோம்.
   
    தற்கால இந்தியாவும் கல்வியும் பாடவேளையில் சமுக சமத்துவமின்மையின் வகைகளை படித்து கொண்டிருந்தோம்.
     
     கலைதிட்டத்தில் விரவியுள்ள மொழியில் குறிப்பெடுத்தல், அதனின் வகைகளும் பற்றி தெரிந்து கொண்டோம்.நூலக பிரிவுவேளையில் அனைவரும் நூலகத்தில் அமைதியாக புத்தகங்களை படித்து கொண்டிருந்தோம்.

Today

இன்று புதிர்களை தீர்க்கும் முறையை பற்றியும் அறிந்தேன் . கல்விதிட்டமிடல் மற்றும் கல்விதிட்டமிடலின் முக்கியத்துவங்கள் , ஐந்தாண்டு திட்டங்கள் , திட்டகுழுவின் மறுவடிவம் , நிதி ஆய்வகம் , குழுவின் அங்கங்கள் கல்வியின் நிதிஉதவி , பொருளுதவியின் முக்கியக்கொள்கைகள் பற்றியும் அறிந்தேன் . முழுமையான ஆற்றலுடன செயல்படுபவரின் இயல்புகள் பற்றி தேர்வு எழுதினேன் . கலைத்திட்டத்திற்கான பாடப்பொருளைத் தேர்ந்தெடுத்தலின் தகுதிப்பாடுகள் பற்றி தேர்வு எழுதினேன் .

Tuesday, 5 December 2017

Today

இன்று குழந்தை மேம்பாட்டில் சமுகவியல்பாக்கும் முகமைகள் பற்றி சமூகவியல்பாக்கல் , அவற்றின் முக்கியத்துவங்களையும் அறிந்தேன் . தாய்மொழி கற்றல் நன்மைகள் ஆங்கிலம் மொழியை கற்பதன் மூலம் நடைபெறும் பயன்கள் , நடப்பாண்டுகளில் பயன்படுத்தப்படும் கற்றல் முறைகளை பற்றி தேர்வு எழுதினேன் .

Monday, 4 December 2017

today

சக்தி புள்ளி எவ்வாறு உருவாக்குவது என்பதை செய்முறை வடிவில் கற்று கற்றுகொண்டேன்.
         
    இதில் படத்தை உள்ளே நுழைத்தல் என்பதையும் அறிந்து கொண்டேன்.
           
    இவை படங்கள்,கருத்துகள்,தகவல்கள் மேலும் சிறப்பாக விளக்க உதவுகின்றது.

    கணினியில் ஸிலைடில் நுழைக்க விரும்பும் படம் இருந்தால்,படத்தினை தேர்வு செய்து கமண்ட் கிளிக் செய்ய வேண்டும்.

    மேலும் அட்டவணை சக்தி புள்ளியில் எவ்வாறு சேர்ப்பது பற்றியும் கற்று கொண்டேன்.

   ஸ்லைடு உருவாக்குவதையும்,எழுத்துக்களை பெரிதாக்குவது,சிறியதாக்குவது,மற்றும் எழுத்துகளில் வண்ணம் சேர்ப்பது போன்றவற்றை அறிந்து கொண்டேன்

Today

இன்று செயல்திட்ட முறைகளின் நன்மைகள் , குறைகள் , புதிர்களை திர்க்கும் முறை , புதிர்களை திர்க்கும் முறைகளில் இடம் றெக்கூடிய படிநிலைகள் அவற்றின் நன்மைகள் , குறைகள் பற்றியும் அறிந்தோன் . உலகமயமாக்கலின் தாக்கங்கள் அவற்றின் நன்மைகள் தீமைகள் , உலகமயமாக்கலினால் குழந்தை வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி அறிந்தேன் .    தேசிய அறிவாண்மை மையத்தின் குறிக்கோள்கள் , ஏற்றுக்கொள்ளுதல் , கருத்துக்கள் , உருவாக்குதல் , பயன்படுத்துதல் , சேவைகள் , குவியப்படுத்தக்கூடியவை பற்றி அறிந்தேன். மாஸ்லோவின் படிநிலைத்தேவைகள் பற்றி தேர்வு எழுதினேன் .   கற்பவர் மையக் கலைத்திட்டம் , பாடத்தொகுப்பு மற்றும் பாடப்புத்தகம் வடிவமைப்பு மாதிரி செயல்பாடுகளுக்கான பணி பட்டியல் , பாடத்தொகுப்பு மாதிரியில் பத்தாம் வகுப்புப் பாடத்தொகுப்பு , அவறறின் நோக்கங்கள் கற்பவர் மையப் பாடப்புத்தகம் தயாரித்தல் கலைத்திட்டத்தை பற்றி கற்றறிந்தேன் .