Friday, 31 August 2018
31.8.18
Tuesday, 28 August 2018
24.8.18
Tuesday, 21 August 2018
21.8.18
Tuesday, 14 August 2018
14.8.18
Thursday, 9 August 2018
28.12.2017
இன்று உலகளாவிய பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. முதல் பிரிவில் கற்றலை மாணவர்களிடம் சென்றடையவேண்டும் என்பதை டாக்டர். பி.சீனிவாசன் அவர்கள் கற்பித்தார். அதில் ஆசிரியர் மாணவர்கள் இடையே வகுப்பறைகளில் கவனம், கருத்து உருவாக்கம் , செய்து காட்டல்,பிரச்சினைகளைத்தீர்த்தல் போன்றவை செயல்படுத்துதல் போன்றவை கற்றுகொடுத்தார்.
அடுத்த பிரிவுவேளையில் கஃப் ஆஃப் டீ, கஃப் ஆஃப் டீச் என்ற தலைப்பில் டாக்டர்.கே.தியாகு சூர்யா அவர்கள் கற்று கொடுத்தார். அதில் குழந்தைகளுக்கு,குமரபருவத்தினர்,தானாக முடிவெடுத்தல்,ஒப்பார்குழுவுடன் இணைந்து கற்றல்,புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்து கற்றல் போன்றவைப்பற்றி புதுமையான முறையில் ஆசிரியர் கற்பித்தல் அறிந்து கொண்டோம்.
23.12.2017
கற்பித்தல்,இடம்பெறக்கூடிய பல்வேறு வகையிலான திறன்கள்,உட்கூறுகள். மீச்சிறு பாடத்திட்ட வரைவு தயார் செய்தல்,அறிவியல் முறை,செயல்திட்ட முறை,புதிர்களை தீர்க்கும் முறைகளின் படிநிலைகள்,ஆசிரியர் கற்பித்தல் முறையின் சிறப்பியல்புகள்,கற்பித்தல் முறைகளுள் கற்பவர் மைய கற்பித்தல் முறைகள் போன்றவை தேர்வு எழுதினோம்.
21.12.2017
இன்று கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழியில் வகுப்பறையில் தகவல் தொடர்பு செயல்பாடு,வினாக்கேட்டலின் வகைகள்,வாய்மொழியின் முக்கியத்துவம்,படித்து பொருளுணர்தலும்,பாதிக்கும் காரணிகள்,இடைவினைத்தன்மை புரிந்து கொள்ளும் தன்மை போன்றவை தேர்வு எழுதினோம்.
பாலினம்,பள்ளி மற்றும் சமுதாயத்தில் பள்ளி பாட நூல்களிலும், கலைத்திட்டங்களிலும் பாலின பங்கு பணிகள்,ஒருங்கிணைத்தல்,பலத்தரப்பட்ட பண்பாட்டு வரம்புகளுக்குள் காணப்படும் பாலினப்பிரச்சனைகள் போன்றவைப் தேர்வு எழுதினோம்.
22.12.2017
இன்று பாடங்கள் மற்றும் பாடப்பொருளைப் புரிந்துகொள்ளலில் பள்ளி கலைத்திட்டத்தில் ஒரு பாடத்தினை சேர்ப்பது அல்லது நீக்குவதற்கான காரணங்கள், சமூக மறுசீரப்பமைப்பிற்காக சமூக கலைத்திட்டம், பாடப்பிரிவு மையக் கலைத்திட்டத்தின் குறைகள்,கற்பவர் மைய கலைத்திட்டம், மாணவர் மையக்கலைத்திட்டத்தை தயார் செய்தல் போன்றவை தேர்வு எழுதினோம்.
அடுத்த பிரிவுவேளைகளில் பொருளறிவியல் கற்பித்தலில் மாணவர் மைய கலைத்திட்டம்,ஆசிரியர் மைய கலைத்திட்டம் போன்றவை படித்து கொண்டிருந்தோம்.
20.12.2017
Leaning and teaching
இன்று கற்றல் கற்பித்தல் தேர்வில் உள்ளொளிக்கற்றல்,அறிதிறன் வளர்ச்சி,மாஸ்லோவின் தேவை படிநிலைகள்,கற்போர் மைய கற்பித்தல் தேர்வு எழுதினோம்.
அடுத்த பிரிவு வேளையில் பாலினமும்,பள்ளிக்கலைத்திட்டமும் படித்து கொண்டிருந்தோம்.
07.08.2018 Observation
நாம்இன்று magnetic effect of electrical பாா்த்தோம். அதில் மாணவர்கள் முன் வகுப்பில் நடந்ததை பற்றி கேட்டனாா்.அதில் drict current and alternative current பற்றி மாணவர்கள் கூறினார்.இப்போது magnetic பற்றி பார்ப்போம்.அதன் பயன்பாடு பற்றி மாணவர்களுக்கு விளக்கினாா்.
Monday, 6 August 2018
First day training
First day training so happy.மாணவர்களிடம் interactionசெய்தோம்.மாணவர்களை கவனித்துக் கொண்டேன்.அதன் பிறகு கரும்பலகையில் தமிழ் கட்டுரையை எழுதினேன்.இதன் மூலம் கரும்பலகையை எவ்வாறு பயன் படுத்த வேண்டும் என்பதை அறிந்தேன்.அதன் பிறகு observation class கவனித்தேன்.இதன் மூலம் வகுப்பாசிரியர் மாணவர்களை எவ்வாறு பாடத்துடன் interaction செய்து கற்றுக்கொடுக்கிறார் என்பதையும் அறிந்துக்கொண்டேன்.
Saturday, 4 August 2018
25.07.18
Today
செயலாற்றல் குறைபாடு குறித்த படிவம் என்பது இயல்புநிலை உடையோர்,பிறிதொரு சாரார் பற்றி உருவாக்கி அளித்திடும் சொற்சித்திரம். செயலாற்றல் குறைபாட்டின் வகைகளான செயலாற்றல் குறைபாடுகுறித்த தனியாள் படிமம்- குறைபாட்டுப் பிரச்சினையின் தோன்றுவது தனிநபரிடத்தில் உள்ளது, குறைபாடு ஏற்படுவதற்கான காரணம், ஒருவரது ஆற்றல் குன்றிருத்தல் ஆகும். செயலாற்றல் குறைபாடு குறித்தசமூகப்படிமம் - ஊனமுற்றோர், இயல்பான சமுதாய வாழ்க்கையைப் பெற்றிடும் வாய்ப்புகள், மற்றவர்களை ஒப்பிடும்போது சம அளவில் இல்லாமலிருப்பது ஆகும்.
24.07.18
Today
நவீனத்துவம் என்பது மரபுரீதியிலானவற்றை மறுத்தொழித்தல்என்பதாகும். மேலும் அதனுடைய இயல்புகளான தனிநபர் வளர்ச்சிக்கு முன்னுரிமையளித்தல், சுதந்தரமும் சமத்துவமும் பேணப்படுதல், மனிதத்தன்மை முழுமை பெற வேண்டும், பகுத்தறிவு வாதம் முன்னிலைப்படுத்தப்படுதல், வேளாண் பொருளாதாரத்தலிருந்து தொழில்சார்ந்த பொருளாதாரத்திற்கு மாற்றுதல், தொழிற்சாலைமயமாக்கல், நகர்மயமாக்கல், சமயச்சார்பின்மையாக்கல்,ஜனநாயக அரசமைப்பு மற்றும் அதனுள் இடம் பெறும் அமைப்புகள் நிறுவுதல் போன்றவற்றை பற்றி தெளிவாக அறிந்து கொண்டோம்.
23.07.18
பண்பாடு
பண்பாடு என்பது ஒரு தலைமுறை மக்கள் தங்களது அடுத்த தலைமுறையினருக்கு வழங்கக்கூடிய அனைத்துமே பண்பாட்டில் அடங்கும்.
பள்ளியும் பண்பாட்டு சூழலும்: பண்பாட்டிற்கு இசைவாக மாணவர்களை மாற்றுதல்.பள்ளியின் மூன்று கடமைகள் 1.பண்பாட்டைப் பாதுகாத்தல் 2.பண்பாட்டைப் பரப்புதல் 3.பண்பாட்டை மேம்படுத்துதல். பண்பாடும்கலைத்திட்டமும்: பண்பாட்டு கூறுகளை அலசி ஆராய்ந்து,விளையாட்டு, வேலைஅனுபவம்,சமூக சேவை,படைப்பாற்றல்தூண்டும் செயல்,தனிநபர் திறன்உணர்த்தும் செயல்கள் ஆகிய கல்விக் கூறுகளின் மூலம் பண்பாட்டின் சிறப்பு அம்சங்களை மாணவர்கள் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்.
14.07.18
Knowledge and curriculum
இன்று அறிவுக்கும் செய்திறனுக்கும் இடையேயான வேறுபாடு பார்த்தோம்.அதன் பிறகு physical science lessons plan பார்த்தோம்.
13.07.18
Knowledge
அறிவு என்பது கோட்பாடுகளின் தத்துவமாகும், படிப்பதன் மூலமே பெற முடியும், ஐம்புலன்களின் மூலமே பெறக்கூடிய தகவல், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும், சூழ்நிலையை சார்ந்தது, கற்றுக்கொள்ளக்கூடியது மற்றும் பல்வேறு பாடங்களிலிருந்து பெறக்கூடியது.
திறன் என்பது நடைமுறை பயன்பாடாகும், குறிப்பிட்ட சூழ்நிலையால் பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்துவதாகும், நடைமுறை பயன்பாட்டிலிருந்து பெற முடியும், பயிற்சி பெறக்கூடியது, மற்றும் பிரச்சனைகளுக்கான காரணங்களுக்கு சரியான தீர்வை காண முடியும் இவற்றிற்றிடையேயான வேறுப்பாட்டை கற்றுக்கொண்டோம்.
12.07.18
Yoga
ஆசனங்கள் மூன்று வகைகளாக உள்ளன. 1.அமர்ந்து செய்யும்ஆசனங்கள்,2.அமர்ந்து செய்யும்ஆசனங்கள்,3.படுத்துக்கொண்டு செய்யும் ஆசனங்கள். இன்று அமர்ந்து செய்யும் ஆசனங்கள் செய்தோம்.1.பத்மாஸானா2.மத்ஸ்யாஸனா 3.வஜ்ராஸனா4.பஷ்சிமோத்தானாசனா 5.வக்ராசனா6.யோகா முத்ராசனா. இவ்வாசனங்கள் மேற்கொள்வதால் சீரான இரத்த ஓட்டம்,ஜிரண மண்டல உறுப்பு,தசைகளின் இறுக்கம்,முதுகுத்தண்டு தசையிலும்,கல்லீரல் வீக்கம் தைராய்டு சுரப்பி இவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் சரிசெய்யப்படுகின்றன. இதனை தொடர்ந்து சூரிய நமஸ்காரத்தின் 12 நிலைகளும் செய்தும் மற்றும் அவற்றினால் ஏற்படும் நன்மைகளும் அறிந்து கொண்டோம்.
11.07.18
Yoga
உள்ளடக்கிய பள்ளியை உருவாக்குதல்பாட வேளையில் குறைபாடுகளின் வகைகளான செவிதிறன் குறைபாடு, பேச்சுதிறன் குறைபாடு, பார்வைதிறன் குறைபாடு, உளவியல் சார்ந்த குறைபாடு என்பதை அறிந்து கொண்டோம்.அறிவு மற்றும் பாடத்திட்டம் பாட வேளையில் கற்பித்தல், பயிற்சி, தகவல் போன்றவைகளை தெரிந்து கொண்டோம்.யோகா,உடல்நலம் மற்றும் உடல்நலக்கல்வி பாட வேளையில் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அதில் 1.ஆசனம்,2.பிராணயாமம்,3.தியானம் மேற்கொள்ளவதால் ஏற்படும் நன்மைகள் எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம்.
10.07.18
Today
அறிவு மற்றும் பாடத்திட்டம் என்ற பாடவேளையில் அறிவாராய்ச்சி அடிப்படையிலான கல்வி என்பதை கற்றுக்கொண்டோம்.Philosophy என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது.Philos-love(true),Sophia-wisdom(knowledge). இதில் ஒன்று அறிவாராய்ச்சி ஆகும். உடல் சோர்வுக்கு மற்றொரு பொருளை weary என்பதை அறிந்து கொண்டோம். சேலம் மாவட்டத்தில் ஐந்து கல்வி பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டோம். யோகா சமஸ்கிருத மொழியான யுஜ் என்ற மொழியிலிருந்து உருவானது.யோகாவின் குரு- பதஞ்சலிமுனிவர். என்பதை அறிந்து கொண்டோம்.
09.07.18
புதிய ஆண்டு தொடக்கம்
இன்று இரண்டாம் ஆண்டு முதல்நாள் தொடங்கப்பட்டது. முதல் பாட வேளையில் அறிவு மற்றும் கலைத்திட்டம்முன்னுரை மேலும் அதிலுள்ள அலகுகள் கலந்துரையாடப்பட்டது. பொருளறிவியல் கற்பித்தல் பாட வேளையில் திறன்கள் கலந்துரையாடப்பட்டது. யோகா,உடல்நலம் மற்றும்உடல்நலக்கல்வி பாட வேளையில் யோகாவின் தோற்றம் மற்றும் தோன்றுவதற்க்கு முக்கிய காரணமானவர்கள்,எப்போது மேற்கொள்ள வேண்டும் என்பது கலந்துரையாடப்பட்டது.உள்ளடக்கிய பள்ளியை உருவாக்குதல்,கற்றல் மதிப்பீடு பாட வேளைகளில் பாடத்தினை பற்றிய கருத்துகள் கலந்துரையாடப்பட்டது.